நீர்மூழ்கிக் கப்பல்

By ஆதி

நீரில் நீந்தி வாழும் இந்தப் பறவை அடிக்கடி நீருக்குள் முங்கி முங்கிக் குளிப்பதால், பெயரே முக்குளிப்பான் ஆகிவிட்டது. சட்டென்று நீரில் முக்குளித்து கண நேரத்தில் மறைந்து போகும் திறமை இதற்கு உண்டு.

ஆங்கிலப் பெயர்:

Little Grebe

அடையாளங்கள்: நன்றாக நீந்தும், குட்டையான வாலில்லா பறவை. சிறிய வாத்தைப் போலிருக்கும். உடல் கரும்பழுப்பு நிறத்திலும், மார்பு- வயிறு பட்டுப் போன்ற வெண் நிறத்திலும் இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் தலையும் கழுத்தும் அடர் பழுப்பு நிறம், பாக்கு நிறம் கலந்து காணப்படும். அலகு சிறியது, கூர்மையானது.

உணவு:

முக்குளிப்பான் நீரில் மூழ்கி உள்நீச்சல் அடித்து இரையைப் பிடித்து உண்ணும். இப்படி அடிக்கடி முக்குளிக்கும். மீன், தவளை, தலைப்பிரட்டை, நத்தை, புழு, பூச்சிகளைத் தேடித் தேடிச் சாப்பிடும்.

இனப்பெருக்கம்:

நீரில் மிதக்கும் செடிகளில் கூடு கட்டும். ரயில் வண்டியைப் போல, இப்பறவைகளைப் பின்தொடர்ந்து இதன் வாரிசுகள் வரிசையாக நீந்திச் செல்லும்.

தனித்தன்மை:

ஏதாவது சத்தம் கேட்டாலோ, ஆபத்து என்று தோன்றினாலோ சட்டென்று நீருக்குள் மூழ்கிவிடும். ஆபத்து நெருங்கிவந்தால் ‘கிளிக் கிளிக் கிளிக்' என்று தொடர்ந்து குரல் கொடுக்கும். அப்போதுகூடப் பறந்து தப்பிக்காது. நீர்நிலைகள் வற்றிப் போனால், வேறு நீர்நிலைகளைத் தேடிப் போகும்.

தென்படும் இடங்கள்:

சிறிய குளம், குட்டை, ஏரிப் பகுதிகளில் ஒன்றிரண்டாகச் சுற்றித் திரிவதைப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்