அடுத்த உலகப் போர் தண்ணீரால்தான் மூளும் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்கள். அது கூடவே மற்றொரு போரும் வந்துவிடக் கூடும். எரிபொருள் ஆதாரங்களான பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவை சீக்கிரத்தில் தீர்ந்துபோவதுதான் அந்தப் போர்.
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மின்சாரம், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை மையமிட்டே நகர்கிறது. ஒரு நிமிடம் கரண்ட் கட்டானாலும் வீட்டுக்குள் இருக்க முடிவதில்லை, இதைப் போல வீட்டுச் சமையல், போக்குவரத்து என நமது வாழ்க்கையோடு எரிசக்தியும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
வரவும் செலவும்
உலக எரிசக்தி ஆதாரங்களில் 1% மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. ஆனால், உலக மக்கள்தொகையில் 16% பேர் இந்தியாவில் உள்ளனர்.
நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 75% இறக்குமதி மூலமே கிடைக்கிறது. இதற்கான செலவு மட்டும் வருடத்துக்கு ரூ. 1,50,000 கோடி.
நாம் பயன்படுத்தும் எரிசக்தி ஆதாரங்களில் பெரும்பாலானவை, மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாகவோ புதுப்பிக்கக் கூடியதாகவோ இல்லை. மீண்டும் புதுப்பிக்கப்பட முடியாத எரிசக்திதான் 80% எரிபொருளாகப் பயன்படுகிறது. நம்மிடம் உள்ள எரிசக்தி ஆதாரங்கள் இன்றும் 40 வருடங்கள் வரையில்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதை 'பீ ஆயில்' என்ற கொள்கை விளக்குகிறது.
குறைப்போம், சேமிப்போம்
எரிசக்தி உற்பத்தி முறைகளும் பயன்பாடும் காற்று மாசுபடுவதற்கும் மிகப் பெரிய காரணங்களாக உள்ளன. அதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவும், எரிசக்தியைச் சேமிக்க வேண்டும்.
எரிபொருளைச் சேமிப்பதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்க முடியும். சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரு வாரம் கூடுதலாகப் பயன்பட்டாலோ, மின்சாரக் கட்டணம் குறைந்தாலோ, எந்த அளவுக்குப் பணத்தைச் சேமிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்
அதேபோலச் சேமிக்கப்பட்ட எரிசக்தி, புதிய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம். ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால், அது 2 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம்.
அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு நாள் டிசம்பர் 14-ம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14-ல் தொடங்கி டிசம்பர் 21-ம் தேதிவரையும் அனுசரிக்கப்படுகின்றன.
அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு நாள் டிசம்பர் 14-ம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14-ல் தொடங்கி டிசம்பர் 21-ம் தேதிவரையும் அனுசரிக்கப்படுகின்றன.
எரிசக்தியைச் சேமிக்க எளிய வழிகள்:
வீடுகளில் மின்சாரச் சேமிப்பு
தேவையில்லாத நேரத்தில் விளக்குகளை அணைத்துவிடுங்கள்
முடிந்தவரை எல்.இ.டி. விளக்குகள் அல்லது சி.எஃப்.எல். விளக்குகளைப் பயன்படுத்த முயலுயுங்கள். இந்த வகை விளக்குகள் நீண்ட காலம் உழைப்பதால், பணம் சேமிக்கப்படும்.
வெளிச்சத்தை மறைக்காத வகையில் பல்புகளைப் பொருத்துங்கள், அடிக்கடி துடையுங்கள்.
எல்.இ.டி - சி.எஃப்.எல். என்ன பயன்?
இந்த வகை விளக்குகளின் விலை அதிகம் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த வகை விளக்குகள் நமக்குத் தரும் லாபம் அதிகம்.
இவை அளவில் சிறியவை. சிக்கனமானவை, அதிக வெளிச்சம் தருபவை.
குண்டு பல்பைவிடக் குறுங்குழல் விளக்குகள் (காம்பேக்ட் புளூரசண்ட் - சி.எஃப்.எல்.), மூன்றில் ஒரு பங்கு மின்சக்தியையே பயன்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, 23 வாட் சக்தியுள்ள சி.எஃப்.எல். பல்பை 90 அல்லது 100 வாட் சக்தியுள்ள குண்டு பல்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
சமையலறை சேமிப்பு
எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் அடுப்புகளைப் பயன்படுத்துங்கள், முடிந்தவரை சிம்மில் வைத்தே சமையுங்கள்.
சமைக்கும்போது, பாத்திரங்களை மூடிவைப்பதால் சமைக்கும் நேரமும் எரிசக்தி பயன்பாடும் குறையும்.
சமைப்பதற்கு முன்னால் உணவுப் பொருட்களை ஊறவையுங்கள். இவற்றின் மூலம் எரிசக்தித் தேவை குறையும்.
உங்கள்வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணக்கிடவும், அதை எப்படிக் குறைக்கலாம் என்பது பற்றியும் யோசனையாக இருக்கிறதா? பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தின் அளவை கணக்கிடக் கீழ்க்கண்ட இணையதளம் உதவும்: http://www.keralaenergy.gov.in/emc-energy-calc-en.html
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago