உயிருக்கு உலை வைக்கும் சாலைப் போக்குவரத்து

By ஆதி

சி.எஸ்.இ. எனப்படும் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநரும் பிரபலச் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளருமான சுனிதா நாராயண், ஒரு விபத்தில் காயமடைந்து, தற்போது குணமடைந்து வருகிறார். காலை நேரச் சைக்கிள் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

இந்தியாவின் முதன்மை சுற்றுச்சூழல் இதழ்களில் ஒன்றான டவுன் டு எர்த் இதழின் ஆசிரியரான சுனிதா நாராயண், நகர்ப்புறச் சாலைகளில் சைக்கிளோட்டிகள், பாதசாரிகளின் உரிமைக ளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். தினசரி காலையில் தனது வீட்டிலிருந்து டெல்லி லோதி பூங்கா வரை அவர் சைக்கிள் ஓட்டுவது வழக்கம்.

சம்பவ நாளன்று அவருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார், சட்டென்று அதிவேகத்தில் பின்னால் நகர ஆரம்பித்து, சுனிதா மீது மோதியிருக்கிறது. இதில் அவரது மணிக்கட்டுகள் இரண்டும் முறிந்தன, சில்லி மூக்கும் உடைந்தது. அப்பகுதியில் சென்ற ஒருவர், எய்ம்ஸ் விபத்து சிகிச்சை பிரிவில் சுனிதாவைச் சேர்த்திருக்கிறார். அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுனிதா, தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், விபத்தை ஏற்படுத்திய அந்த நபர் தலைமறைவாகவே இருக்கிறார். இவ்வளவுக்கும் சம்பவம் நடந்த இடம் பரபரப்பான சந்தைப் பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் நிச்சயம் இருந்திருக்கும். ஆனாலும், இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காதது கேள்வியை எழுப்புகிறது. அப்படியென்றால், மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க என்ற பெயரில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டியதன் அவசியம் என்ன?

நாடறிந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான சுனிதா நாராயண் சிக்கிய இந்த விபத்து, வேறொரு விஷயத்தைக் கவனப் படுத்துகிறது. நமது சாலைகளும் நகரங்களும் எவ்வளவு மோச மாகக் கட்டமைக்கப்படுகின்றன என்பதற்கு இது உதாரணம்.

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு மணி நேரத்திலும் நடக்கும் சாலை விபத்துகளில் ஒருவர் கொல்லப்படுகிறார் அல்லது காயமடைகிறார். அதாவது தினசரி 5 பேர் பலியாகிறார் கள், 18 பேர் காயமடைகிறார்கள்.

டெல்லியில் காரில் பயணிப்பவர்கள் 30 லட்சம் என்றால், சைக்கிளில் செல்பவர்கள் 28 லட்சம் பேர். நடந்து செல்பவர்கள் 5 லட்சம் பேர். ஆனால், காரோட்டிகளும் டூவீலர் ஓட்டிகளும் சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், சைக்கிளோட்டிகள், நடந்து செல்பவர்களுக்கு உதவும் வகை யில் அரசு கொள்கைகள் இல்லை.

"சாலைகளும் பாலங்களும் மோட்டார் வாகனங்கள் வேகமாகச் செல்வதற்கு வசதியாகவே அமைக்கப்படுகின்றன. இவை நடந்து செல்பவர்களுக்கும், சைக்கிளோட்டிகளுக்கும் ஆபத்தாக இருப்பது மட்டுமில்லாமல், வளத்தை அழிக்கும் (Unsustainable) போக்குவரத்து முறையாகவும் உள்ளன. நடப்பதும், சைக்கிள்ஓட்டுவதும் எளிமை யாகவும் பாதுகாப்பாகவும் இல்லாததுடன், பொதுப்போக்கு வரத்து வசதிகளும் குறைவாக இருப்பதால், மக்கள் சொந்த வாகனங்களை வாங்கவே முற்படுவார்கள். அது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் போக்குவரத்து நெரிசலையும் உருவாக்கும். சாலைகளும் நகர்ப்புற வடிவமைப்பும் மக்க ளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். நகரங்களை மக்களின் வசதிக்காக உருவாக்க வேண்டுமே தவிர, வாகனங்களின் வசதிக்காக அல்ல" என்று அறிவியல் சுற்றுச் சூழல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்