தண்ணீர் தினம் - நாம் என்ன செய்யலாம்?

By செய்திப்பிரிவு

உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது. இந்த நாளையொட்டி, தண்ணீரை எப்படிச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றிச் சிந்திக்கலாம். இதன் மூலம் பூவுலகின் சுற்றுச்சூழலைக் காக்க நம்மாலும் சிறிய பங்கைத் தர முடியும்.

# பைப்பில் கழுவுவதற்குப் பதிலாக, காய்கறிகளைப் பாத்திரத்தில் இட்டுக் கழுவலாம்.

# வாஷ் பேசினில் தண்ணீரைத் திறந்துவிட்டுக்கொண்டே பல் துலக்க, முகம் கழுவுவதற்குப் பதிலாக, தேவையான தண்ணீரை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம்.

# ஷவரில் குளிப்பதைவிட பக்கெட்டில் தண்ணீரைப் பிடித்துக் குளிக்கலாம்.

# பாத்ரூம்களில் நாமே இயக்கும் ஃபிளஷ், குழாய்களைச் சரியாக அடைக்க வேண்டும்.

# வெஸ்டர்ன் டாய்லெட் ஃபிளஷில் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

# வாஷிங்மெஷினை எப்போதும் ஃபுல் மோடில் பயன்படுத்தவும்.

# எல்லா பைப்களிலும் தண்ணீர் வெளியேறும் அளவை கட்டுப்படுத்தி வைக்கலாம்.

# ஒழுகும் குழாய்கள், டாய்லெட் கசிவுகளை உடனடியாகப் பழுது பார்க்கலாம்.

# தேவையற்ற நேரத்தில் குழாய்களை அடைத்து வைக்கலாம்.

# தரையைத் துடைத்த தண்ணீர், பாத்திரம் கழுவிய தண்ணீர், துணி துவைத்த தண்ணீர் ஆகியவற்றை டாய்லெட் ஃபிளெஷ்ஷுக்கும், தாவரம் வளர்க்கவும் பயன்படுத்தலாம்.

# வெயிலற்ற காலை, மாலை வேளைகளில் மட்டுமே தாவரங்கள், புல்வெளிகளுக்குத் தண்ணீர் விடுங்கள்.

# அதிகத் தண்ணீர் தேவைப்படாத ஆல், அரசு, அசோகம், வேம்பு, செண்பகம், இயல்வாகை, புங்கை, சரக்கொன்றை போன்ற உள்நாட்டு தாவரங்களை வளருங்கள்.

- சுரேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

சிறப்புப் பக்கம்

9 days ago

மேலும்