சேவல் முத்திரைகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட சிந்து நாகரிகம் தொடங்கி கி.பி. 5-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிறுவப்பட்ட சேவலுக்கான நடுகல் வரையில் சண்டைச் சேவல் குறித்த தகவல்கள் விரவிக்கிடக்கின்றன.
சிந்துச் சமவெளி நாகரிகம் மிக அதிக அளவில் திராவிடக் கூறுகளைக் கொண்டுள்ளது என்பதே அறிஞர்கள் பலரின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் அதிக அளவில் சேவல் போர்கள் பற்றிய குறியீடுகள் சிந்து நாகரிகத்தில் கிடைத்தன.
சிந்து எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகளில் கல்வெட்டியலாளர் ஜராவதம் மகாதேவன், மொகஞ்சதாரோவில் முன்பு கண்டு எடுக்கப்பட்ட முத்திரைகளின் வாயிலாக அங்கு அன்றே சேவல்போர் நடைபெற்றதையும், அது ஒரு சடங்காக அங்கு நிலவி இருந்திருக்கலாம் என்றும் கூறினார். மேலும் சேவல் முத்திரையாகப் பொறித்ததன் மூலம் அது சேவலை மிகுந்த அல்லது சேவலால் பேசப்பட்ட ஊருடைய பெயரின் குறியீடாக இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார். அந்த முத்திரையில் உள்ள சேவல்களைப் பார்க்கும்போது அதனுடைய சிறகு அமைப்பு, தலை, நீண்ட கழுத்து, உடலமைப்பு ஆகியவை சண்டைச் சேவலை ஒத்தவை.
இறைச்சிக்கான பயன்பாட்டைத் தாண்டி சடங்குக்காக (சேவல் போர்களுக்காக) இவை அன்று பயன்பாட்டில் இருந்தன என்றால், அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே சேவல் போர்கள் இருந்ததை அறிந்துகொள்ளலாம். இன்னும் அந்த பகுதிகளில் (பாகிஸ்தான்) சேவல் சண்டை நடந்து வருவதற்குக்கூட அதுவே ஆரம்பமாக இருக்க வாய்ப்புள்ளது.
திராவிடயியல் ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் (ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையர்) ‘சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற ஆய்வு நூலில் சிந்து நாகரிகத்தின் திராவிடக் கூறுகளுடைய அடித்தளத்தை நிறுவுவதற்கான மிக முக்கிய கருதுகோளாக சேவல் உருவம் பொறித்த முத்திரையைச் சான்றளிக்கிறார்.
ஜராவதம் மகாதேவன் குறிப்பிட்ட முத்திரைகளை முன்வைத்து இருபது ஆண்டுகளுக்கு மேல் தாம் மேற்கொண்டு வந்த இடப்பெயர் ஆய்வுகளுடன் அதைப் பொருத்திப் பார்த்து மேலும் விரிவாக்கம் செய்கிறார். அப்படிப் பார்க்கும்போது அந்த முத்திரையானது (மார்ஷல் முத்திரை எண் 338) சண்டைச் சேவல்களுக்குப் பெயர் பெற்ற ஒரு நகரத்தின் இரண்டு பகுதியைச் சேர்ந்த சேவல்கள் அவை.
அதனாலேயே இவை ‘சேவல் நகரம்’ என்று பெயர் பெற்று இருக்க வேண்டும் எனக் கருதுகிறார். நகர்மயமான பண்பாட்டை உடைய சிந்து வெளி நாகரிகத்தின் போர் சேவல் மரபின் தொடர்ச்சியில் தமிழகச் சேவல் சண்டை மரபையும் வைத்துப் பார்க்கலாம்.
கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago