கோடை மழைப் பொழிவு குறைவு
இரு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் சில பகுதிகளில் கோடை மழை பெய்தது. ஆண்டுதோறும் பருவ மழை தொடங்கும் முன் பெய்யும் இந்தக் கோடை மழையை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழையின் அளவு குறைந்துள்ளது.
இதனால் கோடை மழையை நம்பியுள்ள விவசாயமும் பாதிப்படையும். மார்ச், ஏப்ரலவரை மழை இல்லாத நிலையில் மே மாதத்திலும் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் விவசாயப் பொருட்கள் விலை கூட வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தெலங்கானாவில் இரண்டு வெள்ளாமையும் பாதிப்பு
தெலங்கானாவில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் இரண்டு வெள்ளாமையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் ரூ. 5,000 கோடி ரூபாய் அளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அங்குள்ள விவசாய சங்கம் தெரிவிக்கிறது. ஒரு கோடி ஏக்கர் அளவில் விவசாயம் நடக்கும் மாநிலம் தெலங்கானா. இதில் 47 லட்சம் ஏக்கர்வரை பருத்தி பயிரிடப்படுகிறது. மீதமுள்ள நிலங்களில் நெல், மக்காச்சோளம், கரும்பு, மிளகாய் ஆகியவை பயிடப்படுகின்றன.
இவற்றுள் மிளகாயைத் தவிர மற்ற பயிர்கள் எல்லாம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் அறிவித்தது போல் தெலங்கானாவில் வறட்சியை அறிவிக்கும்படி விவசாய சங்கங்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. ஆனால் இது தண்ணீர்ப் பற்றாக்குறைதான், வறட்சி அல்ல என அரசு தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துவருகிறது.
வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ‘மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவு தயாரித்தல்’ பயிற்சி நடத்தப்படவுள்ளது. இந்த மாதம் 7, 8 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும்.
தொகுப்பு: விபின்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago