ஞெகிழி பூதம் 11: தூக்கி எறிதலும் திரும்பி வருதலும்

By கிருஷ்ணன் சுப்ரமணியன்

பொருட்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. பயன்பாட்டுக்குப் பிறகு பால் பாக்கெட்டுகள் வீட்டிலே சேகரிக்கப்பட்டு, எடைக்குப் போடப்பட்டன. தீர்ந்துபோன மருந்து,  மற்ற பாட்டில்களின் அளவுக்கு ஏற்ப காயலாங் கடைக்காரரிடம் பேரம் பேசி விற்கப்பட்டது. 

வீட்டில் ஒருவருக்காவது நேரமும் பொறுமையும் கூடவே பொருட்களின் அருமையும் தெரிந்திருந்தது. ஒரு சமூகமாக நாம் தூக்கி எறிந்த பொருட்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துவந்தது.

குப்பையின் பெருக்கம்

இன்றைய வளர்ச்சியின் முக்கியக் குறியீடாக நமது குப்பையின் அளவும் இருக்கிறது. சிறு நகரங்களில் குறைவாகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, குறைவான பொருட்களே ஞெகிழி உறையிட்டு விற்கப்படுகின்றன, குறைந்த உணவே வீணாகிறது. வளர்ந்த பெருநகரங்களோ எல்லா வகைகளிலும் அதிக குப்பையை உருவாக்குகின்றன.

குப்பை என்பது மன அழுத்தத்தைப் போன்று வளர்ச்சி சார்ந்த ஒரு பிரச்சினையே. வீடுகள், கட்டிடக் கழிவு, தொழிற்சாலைக் கழிவு என்று விதவிதமான கழிவைத் தினமும் உருவாக்கிவருகிறோம்.

ஒரு சமூகமாக ஒவ்வோர் ஆண்டும் நாம் தூக்கி எறியும் பொருட்களின் மொத்த எடை என்ன தெரியுமா?

2,00,000 கோடி கிலோ.

ஒரு நாளைக்குச் சராசரியாக 550 கிலோ. இன்று பூமியில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு நாளைக்கு முக்கால் கிலோ குப்பையை உருவாக்குகிறார்.   அந்தக் குப்பையில் 12% மக்காத ஞெகிழிப் பொருட்கள்.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்