புதிய மஞ்சளுக்கு மவுசு

By ஜெய்குமார்

கடந்த சில நாட்களாக ஈரோடு மஞ்சள் சந்தையில் புதிய மஞ்சளுக்கு வரவேற்பு கூடிவருகிறது. ஏற்றுமதிக்காக இந்தப் புதிய மஞ்சள் அதிக அளவில் வாங்கப்படுவதாக ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய மஞ்சள் ஒரு குவிண்டால் ரூபாய் 5,459லிருந்து ரூபாய் 7,407 வரை விற்பனையாகிறது. சந்தைக்குப் புதிய மஞ்சள் வரத்தும் அதிகரித்துவருகிறது. கடந்த திங்கள் அன்று விற்பனைக்கு வந்த 3,500 மூட்டைகளில் 2,000 மூட்டைகள் புதிய மஞ்சளாக இருந்தன.  பழைய மஞ்சள்  ஒரு குவிண்டால் ரூபாய் 5,009லிருந்து ரூபாய் 6,959 ஆக குறைவான விலைக்கே விற்பனையாகி வருகிறது.

மிளாகாய் வற்றல் விலை சரிவு

hnjfif100 

ஆசியாவின் மிகப் பெரிய மிளகாய் வற்றல் சந்தையான குண்டூரில் வற்றல் விலை சரிந்துள்ளது. பூச்சித் தாக்குதலால் இந்தாண்டு மிளகாய் விளைச்சல் குறைவுதான் என ஆந்திர மாநில விவசாயிகளின் சங்கத்தின் (Rythu Sangham of Andhra Pradesh) தலைவர் பெட்டி ரெட்டி குறிப்பிடுகிறார். ஆனால் சென்ற வருடம் இருப்பில் வைக்கப்பட்ட மிளகாய் வற்றலே இந்த விலை குறைவுக்கான காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதனால் குண்டூர் சந்தையில் ஒரு குவிண்டால் வற்றல் ரூபாய் 5,000லிருந்து ரூபாய் 6,000 வரைதான் விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 2,000 வரை குறைவு. அதுபோல் தேஜா வகை வற்றல் ரூபாய் 7,000லிருந்து ரூபாய் 8,000 வரைதான் விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 5,000 வரை குறைவு. இந்தியாவின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் சரி பாதி ஆந்திரப் பிரதேசம், தெலுங்கா ஆகிய இரு மாநிலங்களில் நடக்கிறது.

ஆமணக்கு விதை விலை அதிகரிக்கும்

fghjjfif100 

ஆமணக்கு விதை உற்பத்தி சென்ற ஆண்டைவிட இந்தாண்டு குறையும் என இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் (Solvent Extractors Association) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2017 – 2018 ஆண்டுக் காலத்தில் 14.16 லட்சம் டன் ஆக இருந்த உற்பத்தி 2018-2019-ல் 20 சதவீதம் சரிவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலம் தவறிய மழைதான் உற்பத்தி குறைவுக்கான காரணமாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மேலும் ஆமணக்குப் பயிடுவது சென்ற ஆண்டை விடக் குறைந்திருக்கிறது. ஆமணக்கு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் குஜராத்தில் மட்டும் சென்ற ஆண்டிலிருந்து  57,200 ஏக்கர் அளவு பயிரிடுவது குறைந்துள்ளது. இந்த உற்பத்திக் குறைவால் ஏப்ரலுக்குப் பிறகு ஆமணக்கு விதை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்