மண்புழுக்களுக்கு ‘விவசாயி களின் நண்பன்’ எனும் பட்டப்பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியும். சரி, மண்புழுக்களின் சராசரி நீளம் எவ்வளவு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான உங்கள் பதில் சென்டிமீட்டர் கணக்கில் இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது சராசரி மண் புழுக்கள்.
ஆனால், ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மெகா சைஸ் மண்புழுக்கள் இருக்கின்றன, தெரியுமா? முதல் பார்வைக்கு நீள மான பாம்போ என்று நினைக்க வைக்கக்கூடிய அளவுக்கு நீளமாக வும் பருமனாகவும் காட்சி அளிக்கும் மண்புழுக்கள் இருக்கின்றன.
ஜெய்ண்ட் ஜிப்ஸ்லாண்ட் மண்புழுக்கள் என்று அழைக்கப்படும் இந்தப் புழுக்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அந்தக் கண்டத்தில் மட்டுமே இவற்றைப் பார்க்கலாம் என்று உயிரியல் நிபுணர்கள் சொல்கின்றனர். ஆஸ்திரேலியாவில்கூட , தென் கிழக்குப் பகுதியான விக்டோரியா மாகாணத்தில் பாஸ் நதிக்கரை பகுதியில் மட்டுமே இவை காணப் படுகின்றன.
இவை சராசரியாக ஒரு மீட்டர் நீளம், 2 செ.மீ. சுற்றளவுடன் 200 கிராம் எடைகொண்டவை. இவற்றின் உடல் விரிவடையும்போது இரண்டு மீட்டர் வரை நீளம் கொண்டிருக்கும். 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய இந்த மண்புழுக்களில் 3 மீட்டர் அளவுக்குப் பெரிதான வைகூட இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
மெகா மண்புழுக்களாக இருந்தாலும், பெரும்பாலும் இவை மனிதர்களின் கண்களில் படுவதில்லை. இதற்குக் காரணம் இவை பெரும்பாலும் மண்ணுக்கு 5 மீட்டர் ஆழத்தில் வசிப்பதுதான். பொதுவாக மண்புழுக்கள் கழிவுகளைக் கழிக்க, பூமிக்கு மேலே வரும் பழக்கம் இருக்கிறது. ஆனால் இந்த மெகா மண்புழுக்கள் எல்லாவற்றையும் மண்ணுக்கு அடியிலேயே முடித்துக்கொள்வதால், பெரும்பாலும் மேல் பகுதிக்கு வருவதேயில்லை. இவை மிகவும் நுட்பமானவை. மண்ணில் காலடி ஓசை கேட்டாலே பூமிக்கு அடியில் இருக்கும் இடத்தை விட்டு இவை முன்னே நகர்ந்து சென்றுவிடும். உள்ளே இவை ஊர்ந்து செல்லும் ஓசை, மேலே விநோதமான ஒலியாகக் கேட்கும் என்றும் சொல்கின்றனர்.
இந்த மண்புழுக்கள் 1870களில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது ஆஸ்திரேலியாவின் வாருங்கல் பகுதியில் இவற்றைக் கண்ட சர்வேயர்கள், விக்டோரியா தேசிய அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த பேராசிரியர் பெட்ரி மெக்காய்தான், இவை புதிய மண்புழு இனத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வு செய்து கூறினார். அதன் பிறகு இவற்றுக்கு மெகாஸ்கொலைட்ஸ் ஆஸ்த்ரலிஸ் (Megascolides australis.) எனப் பெயரிடப்பட்டது.
ராட்சத மண்புழுக்களாக இருந்தாலும் இவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் இவற்றுக்குப் பாதுகாப்பாக இருந்த யூகலிப்டஸ் காடுகள், விவசாயத்துக்காகப் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதுதான். அது மட்டுமல்ல, இவை இனப் பெருக்கம் செய்யும் வேகமும் கொஞ்சம் மந்தம். இந்த மண் புழுக்கள் இடும் முட்டை 4 முதல் 7 செ.மீ. அளவுக்குப் பெரி தாக இருக்கும். ஒரு முட்டையில் ஒரு மண்புழுதான் உருவாகும். ஆனால், அந்த மண்புழுவும் ஒரு வருட காலம் அடைக்காக்கப்பட்ட பிறகுதான் உருவாகும்.
இந்த மண்புழுக்களை ஆஸ்தி ரேலியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்துள்ளனர். உலகிலேயே மிகப் பெரிய புழு என்று சொல்லப்படும், இந்த மண்புழுக்கள் பற்றிக் குறைவான விவரங்களே தெரியவந்துள்ளன.
இந்த மண்புழுக்களுக்காக ஒரு திருவிழாவே நடத்தப்பட்டு வருகிறது. விக்டோரியா மாகாணத் தின் கொரும்பாரா கிராமத்தில் இந்த விழா நடைபெறுகிறது. சுமார் 3,000 மக்கள் வசிக்கும் இந்தக் கிராமம் 1970களில் பொருளாதாரச் சீர்குலைவுக்கு ஆளானபோது, இங்குள்ள ராட்சத மண்புழுக்களை வைத்துச் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுத்து பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளனர். அதற்கு நன்றிக் கடனாகத்தான் மண்புழு விழா நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள் பட்டியலில் இந்த மண்புழுக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜிப்ஸ்லாண்ட் மண்புழு பற்றி அறிய: http://museumvictoria.com.au/discoverycentre/ infosheets/giant-gippsland-earthworm/
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago