மலாய் அசில்கள் பற்றிய முதல் தெளிவான அறிமுகத்தை 1905-ம் ஆண்டு வெளிவந்த ‘The Book of Poultry’ என்ற லூயி ரைட் புத்தகம் முதன் முதலாகப் பதிவுசெய்துள்ளது. லூயியின் கருத்துகள்படி மலாய் அசில் என்பது ஆசிய இனத்தில், குறிப்பாக கேரளப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டது. அவை அளவில் பெரியவை. அவற்றின் வால் கீழ் நோக்கி இருக்கும்.
பழமையான அசில் இனமான இது, வண்ணங்களிலும் உண்டு. மலாய் அசில், கேரளப் பகுதி அசில்களின் வழித்தோன்றல்தான். மேலும், இவை வேறு சில உள்ளூர் இனங்களுடன் இணைச்சேர்க்கை செய்தும் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று இந்தப் புத்தகத்தில் லூயி பதிவுசெய்துள்ளார்.
இந்த மலாய் அசில் மலேயத் தீபகற்பத்தில் இருந்து உருவானவை என்ற கருத்தும் இருந்தது. வியக்கத்தக்க வகையில் இவை உலகத்தின் பல பகுதிகளுக்குப் பரவின என்பதே உண்மை.
வென்ஸ்டர்பஷ் என்ற ஆய்வாளர் 1925-ம் ஆண்டு எழுதிய ‘Gamefowl and their ancestors’ என்ற கட்டுரையில், மங்கோலியச் சண்டைச்சேவல் இனங்களில்கூட மலாய் அசிலின் கூறுகளைக் காண முடிவதாகக் கூறுகிறார். மேலும் ‘Cornish Fowl’ என்று அழைக்கப்படும் ஒரு அசில் இனத்துக்கு ‘Indian Game’ என்ற பெயரும் உண்டு.
இது இந்திய-இங்கிலாந்துக் கலப்பினச் சேவலாகும். இதிலும் மலாய் அசிலின் கூறுகளைக் கண்டதாக அவர் பதிவுசெய்துள்ளார். தொடக்கத்தில் இந்த இனச் சேவல்களின் பூர்விகம் குறித்த சந்தேகம் தொடர்ந்தது. 1934-ம் ஆண்டு ‘Ceylon Poultry Club’ போட்டியில் பரிசு வென்ற சேவலின் உருவம், நமது சேவல்களை ஒத்தது.
‘Asiatic Gamefowl Society’யின் செயலாளரும் ஆய்வாளருமான வில்லியம் வான் பெல்கிங் புலம் பெயர்வுகள்/ இனச்சேர்க்கைகள் மூலம் உருவான சேவல்களைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில் இவை தென்திராவிட இனச் சேவல்கள் என்ற முடிவுக்கு வந்தார். பழந்தமிழர் கடல்வழி வாணிபம் செய்த காலங்களிலே இவை மலேயா, சுமத்திரா போன்ற இடங்களுக்குப் பரவின என்றும் அவர் கூறுகிறார். இன்று உலகின் பல பகுதிகளுக்கும் இந்தச் சேவல் இனம் பரவியிருக்கிறது.
கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago