கடந்த வாரம் வெளியான செய்தி ஒன்று நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது. ஹாரியர் (பூனைப் பருந்து) பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதுதான்.
உலகம் முழுவதும் சுமார் 16 வகையான ஹாரியர் பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் மோண்டாகு ஹாரியர், பேல்லிட் ஹாரியர், யுரேசியன் மார்ஷ் ஹாரியர் உள்ளிட்ட சுமார் 5 வகையான பறவைகள் இந்தியாவுக்கு வலசை வந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பா, ரஷ்யா, தென் சீனா போன்ற பகுதி களிலிருந்து குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற இடங்களுக்கு இவை வலசை வரும். இவற்றின் வாழிடம் வறண்ட, புல்வெளி நிலங்கள்தாம். எனவே ராஜஸ்தானில் உள்ள தால் சப்பார் சரணாலயம், குஜராத்தில் உள்ள வேலவதார் தேசியப் பூங்கா, ‘லிட்டில் ரான் ஆஃப் கட்ச்’, ஆந்திராவில் ரோல்லபடு சரணாலயம் போன்ற பகுதிகளில் அதிக அளவில் இவற்றைக் காண முடியும்.
இவற்றின் உணவுப் பட்டியலில் சிறு சிறு பறவைகள், வெட்டுக் கிளிகள் போன்ற பூச்சிகள் முதல் எலிகள், பாம்புகள்வரை அடங்கும். இதர பறவைகளைப் போல இவை, மரத்தில் குந்திக்கொண்டி ருக்காமல், வானில் எப்போதும் சுற்றியலைந்தபடியே இருப்பதுதான் ஹாரியர் பறவைகளின் சிறப்பம்சம்.
பல காட்டுயிர் ஒளிப்படக்காரர்கள் பல வகையான ஹாரியர் பறவைகளைப் படம் எடுத்திருந்தாலும், மோண்டாகு ஹாரியர் பறவையைப் படம் எடுப்பது அவர்களின் கனவாக இருக்கும். காரணம், அவை மிகவும் சிறிய, ஆனால் நேர்த்தியான ஒரு பறவை. அந்தப் பறவையை நான் முதன் முதலில் தால் சப்பார் சரணாலயத்தில் படம் எடுத்தேன்.
முன்பெல்லாம் ஒரு இடத்தில் ஆயிரம் எண்ணிக்கையில் ஹாரியர் பறவைகளைப் பார்த்தால், இப்போது அதே இடத்தில் வெறும் நூறு எண்ணிக்கையில் மட்டுமே இந்தப் பறவைகளைப் பார்க்கிறேன். ஏன் அப்படி? நகரமயமாக்கலால் புல்வெளிகள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற, விவசாயப் பயன்பாட்டுக்கான ரசாயன உரங்களால் வெட்டுக்கிளி போன்றவை காணாமல் போக, ஹாரியர் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகின்றன. அவற்றைக் காப்பதற்கான முதல் படி, புல்வெளி நிலங்களைக் காப்பாற்றுவதுதான்.
கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago