உலகில் வாழும் உயிரினங்களின் தொகை குறித்து உலக இயற்கை நிதியம் (WWF) ஆண்டுதோறும் அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கையின்படி 1970-2020க்கு இடைப்பட்ட 50 ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த உயிரினங்கள் தொகை 73 சதவீதத்துக்குப் பெரும் சரிவைக் கண்டுள்ளன. இதன் காரணமாக ஆபத்தான உச்சப் புள்ளிகளைப் புவி எதிர்கொண்டிருப்பது மனித குலத்தின் இருப்புக்கே பேராபத்தாக மாறிவருகிறது. இயற்கை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியையும் அத்துடன் காலநிலை மாற்றம் சார்ந்த பேராபத்தையும் தடுத்து நிறுத்த மக்கள் ஒன்றுகூடிச் செயல்பட வேண்டிய தேவை தீவிரமாக எழுந்துள்ளது.
லண்டன் விலங்கியல் சங்கம் வெளியிடும் லிவிங் பிளானட் குறியீடு 1970-2020 வரையிலான 50 ஆண்டுகளில் 5,495 உயிரினங்களின் 35,000 உயிரினத்தொகை போக்குகள் குறித்து ஆராய்ந்திருக்கிறது. அந்த வகையில் நன்னீர் உயிரினத் தொகை 85 சதவீதமும், தரைவாழ் உயிரினத் தொகை 69 சதவீதமும், கடல்வாழ் உயிரினத் தொகை 56 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன. நமது உணவுத் தேவைக்காக மேற்கொள்ளப்படும் வாழிட அழிவு-சிதைவு, அதிகப்படியான சுரண்டல், அயல் உயிரினங்கள், நோய்கள் போன்றவை காட்டுயிர் உயிரினத்தொகைகளின் சரிவுக்குக் காரணமாக மாறியுள்ளன. ஆசிய, பசிபிக் கண்டங்களில் உயிரினத்தொகையின் 60 சதவீத சரிவுக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு கூடுதல் காரணமாக உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
28 mins ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago