மயில்..!
எல்லா தலைமுறையைச் சேர்ந்தவர்களும் பார்த்த கவர்ச்சிகரமான ஒரு பறவை எது என்று என்றால், அது நிச்சயமாக மயிலாகத்தான் இருக்கும். மயிலை வாகனமாகவும், அதன் இறகை மகுடத்தில் சூடிக்கொள்ளும் ஆபரணமாகவும் கொண்ட கடவுளர்கள்கூட, மயிலுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள்.
இந்தியக் கிராமங்களில் சாதாரணமாகத் தென்படும் இந்தப் பறவைகளை, நான் ஒளிப்படம் எடுக்க ஆரம்பித்த பின்பு, ஆப்பிரிக்காவில் உள்ள கானா தேசியப் பூங்காவில் பார்த்தேன். ஒற்றை மயில் அல்ல… ஒரு மயில் கூட்டத்தையே. அவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மயில்களை, ஒரே இடத்தில் அங்குதான் முதன்முதலில் பார்த்தேன்.
கண்ணின் தெளிவு
2006-ல் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பறவைகள் தொடர்பான நாட்காட்டியை உருவாக்கும் பணிக்காகப் படமெடுக்கச் சென்றிருந்தேன். அங்கு ‘சரஸ்வதி பூங்கா’ எனும் இடத்தில் காலை 7 மணிக்கு சுமார் 10 - 15 மயில்கள் வரும். அவற்றுக்கு அரிசி, சோளம், கம்பு ஆகியவற்றை வழங்குவதற்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து பெண்கள் சிலர் வருவார்கள். இப்படி மயில்களுக்கு உணவிட்டால், நல்லதைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை அவர்களிடையே நிலவுகிறது.
தமிழகத்தில் இந்தப் பறவை, உழவர்களின் எதிரியாகப் பார்க்கப்படுகிறது. அதனால் இவற்றைக் கொல்லவும் செய்கிறார்கள். ஆனால் வடஇந்தியாவில், இந்தப் பறவைகளைக் கொல்வதில்லை. அதற்கு மதரீதியான காரணங்கள் இருக்கின்றன. எனவே, வயல்களுக்கு வரும் மயில்களைத் துரத்துவதற்கென்றே ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள்.
மயிலைப் பார்த்தவர்கள் உண்டு. எத்தனை பேர் அது நடனமாடுவதைப் பார்த்திருப்பார்கள்? ‘மழை வருவதால் மயில் ஆடுகிறது’ என்று சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது முழு உண்மையல்ல. இணை சேரும் காலத்தில், பெண் மயிலை ஈர்ப்பதற்காக ஆண் மயில், தோகையை விரித்து ஆடும். அப்போது அதன் தோகையில் உள்ள கண்களில் (நீலமும் பச்சையும் சேர்ந்த புள்ளிகள்) பச்சை நிறம் எவ்வளவு தெளிவாக உள்ளது, எவ்வளவு அடர்த்தியாக உள்ளது என்பதைப் பொறுத்தே, ஆண் மயிலைப் பெண் மயில்கள் தேர்வு செய்யும்.
ஆக்ரோஷம்
பெண் மயிலைக் கவர்வதற்காக ஆண் மயில்கள் ஆடும் நடனத்தில் உள்ள ஆக்ரோஷம், தங்கள் இடத்தை வரையறுப்பதிலும் இருக்கும். அப்படி, ‘இது என்னுடைய இடம். நீ இங்கே வரக் கூடாது’ என்று சொல்லும்விதமாக, இரண்டு ஆண் மயில்கள் சண்டையிடும் இந்தப் படத்தை, ஜிம் கார்பெட்டில் உள்ள ‘சாம்பியன் சாலை’ எனும் பகுதியில் எடுத்தேன்.
இதில் என்ன சிறப்பு என்றால், நான் சென்றுகொண்டிருந்த வாகனத்துக்கு முன்னால்தான் இந்த இரண்டு பறவைகளும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. பொதுவாக வண்டி வந்தால், எந்த உயிரினமும் பதறியடித்துச் சென்றுவிடும். ஆனால், வண்டி வருவதைக்கூட சட்டை செய்யாமல், தங்களின் சண்டையில் இந்த இரண்டு பறவைகளும் மும்முரமாக இருந்தன. அதுவும், குத்துச்சண்டை மேடைக்குள் இரண்டு வீரர்கள், சுத்திச் சுத்தி வந்து சண்டையிடுவார்களே, அதுபோன்று சுத்திச் சுத்தி வந்து சண்டையிட்டுக்கொண்டன அவை.
‘சாம்பியன்’ சாலையில், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்தச் சண்டையில், இறுதியில் ‘சாம்பியன்’ ஆனது எந்த மயில் என்பதுதான் தெரியவில்லை!
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago