கூடு திரும்புதல் 07 | காற்று விதைத்தவன்

By வறீதையா கான்ஸ்தந்தின்

மனித நடவடிக்கைகளினால் பூமியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிப் பேசும்போது இயல்பாகவே நம் மனத்தில் சில கேள்விகள் எழுகின்றன- மனிதனின் வரவுக்கு முன்னால் புவியின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதில்லையா? மனித இனம் தோன்றியிராவிடில் புவிக்கோள் அப்படியே இருந்திருக்குமா?

இல்லை. மாற்றம் அண்டத்தின் நியதியாக இருந்துவருகிறது. பெரு வெடிப்பின் காலம் தொடங்கி, பால்வெளி தோன்றி, 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியன் என்னும் சிறு விண்மீன் குடும்பத்தின் ஓர் உறுப்பாக புவிக்கோள் தோற்றம் கொண்டு, உயிர்களைத் தோற்றுவித்துப் பராமரிக்கும் அளவுக்குத் தணிந்து (300 கோடி ஆண்டுகள்), மனித இனம் தோன்றி, செயற்கை நுண்ணறிவைச் சாத்தியப் படுத்தியிருக்கும் இன்றைய காலம் வரை- உறைபனிக்காலம், கடும் வெப்பக்காலம் என்பதாக உலகின் காலநிலை பல யுகங்களாக மாறிமாறி வந்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE