‘ஓகி’ மரணங்கள்– “இனப்படுகொலை என்கிறேன் நான்” - டி.அருள் எழிலன்
சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி! கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டன.
காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் கேட்கும் பல கேள்விகளுக்கு அரசுகளிடம் பதில் இல்லை. மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான கருவிகளோ, வசதியோ மத்திய அரசிடம் இல்லை என்பது எவ்வளவு பெரிய அவலம்? இந்த அம்சங்களை முன்வைத்து பத்திரிகையாளர் டி.அருள் எழிலன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், அரசுகளின் இயலாமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது!
New Doc 2018-02-22_1rightஎங்கே செல்கிறதுஎங்கள் வேளாண்மை - கிழார்
அரசுகளால் கைவிடப்பட்ட ஒன்றாக விவசாயம் இருந்து வரும் நேரமிது. விவசாயிகள் தற்கொலை, மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாதது, வீரியம் குறைந்த விதைகள், உவர்நிலமாக மாறி வரும் விளைநிலங்கள் என அனைத்துத் திசைகளிலிருந்தும் பல்வேறு பிரச்சினைகளை இந்திய வேளாண்மை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் கிழார் எழுதிய ‘எங்கே செல்கிறது எங்கள் வேளாண்மை’ நூல், இயற்கை வேளாண்மையின் தேவை, உள்ளூர் வேளாண்மையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றி 21 தலைப்புகளில் ஆழமாக அலசுகிறது.
மலைப்பாடகன்- சாளை பஷீர்
சுற்றுச்சூழல் எழுத்து மீது பேரார்வம் கொண்ட சுயாதீனப் பத்திரிகையாளர் சாளை பஷீர், பல்வேறு காலகட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். காணிப் பழங்குடிகள், லாரி பேக்கர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த திரை விமர்சனம், நூல் மதிப்புரை, பயணம் எனப் பல விஷயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன தொகுப்பில் உள்ள கட்டுரைகள்.
சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு பேசுபொருள்களை அலசியுள்ள சில கட்டுரைகள் ஆழமாகவும் அமைந்துள்ளன.
மூன்று புத்தகங்கள் தொடர்புக்கு: பூவுலகின் நண்பர்கள் - தமிழ்நாடு & புதுச்சேரி, 106/2, முதல் தளம், கனக துர்கா வணிக வளாகம், கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி, சென்னை-600026 கைபேசி: 94440 65336
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago