தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 68: நெய்தல் நில வேளாண்மை

By பாமயன்

 

கு

றிஞ்சியில் உழாத வேளாண்மை செய்தும், முல்லையில் கால்நடை வேளாண்மை செய்தும், மருதத்தில் நெல்லை அடிப்படையாகக்கொண்ட வேளாண்மை செய்தும் மக்கள் வாழ்ந்ததுபோல, நெய்தல் நிலத்தில் மீனும் நெல்லும் இணைந்த சாகுபடி முறையைக் கையாண்டனர்.

குறிப்பாக நெய்தல் திணை மண்டலம் என்பது கடலும் கடல்சார்ந்த பகுதியும் (coastal eco system) என்று இலக்கணப்படுத்தப்படுகிறது. இங்கு அதிக அளவில் கடலுடன் வண்டல் கலப்பு ஏற்படும். அத்துடன் உப்புநீரும் நன்னீரும் இணையும். இந்த மாறுபட்ட சூழல் அமைப்பு வெப்ப மண்டலப் பகுதிகளில் அபரிமிதமான விளைச்சலைக் கொடுக்கிறது.

அதிக உற்பத்தி

வெப்ப மண்டல நெய்தல் நிலங்களில்தான் உலகத்தில் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த அலையாத்திக் காடுகள், பவளத்திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்கு எண்ணற்ற மீன் இனங்கள் பல்கிப் பெருகுகின்றன. கடலின் உட்பகுதியில் அதிக அலையின் வேகமும் பிற உயிர்களின் தாக்குதலும் இருப்பதால் அலையாத்திக் காடுகள் உள்ள பகுதிகளில் மீன்கள் முதலிய கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் குஞ்சு பொரிக்கின்றன. அதேபோல பவளத் திட்டுகள் உள்ள பகுதிகளிலும் அரிய வகை மீன்கள் உற்பத்தியாகின்றன.

இப்படி கடல் நீரும் நன்னீரும் இணையும் பகுதியில் ஓரவிளைவு (edge effect) என்ற விளைவு ஏற்படுகிறது. அதாவது தரைப் பகுதி, கடலின் நீர்ப் பகுதி இணைகிற ஓர் இடம். அத்துடன் நல்ல நீர், உப்பு நீர் இரண்டும் இணைகிற ஒரு இடம் என்று இரண்டு புதிய கூறுகள் சந்திக்கின்றன. அதனால் உற்பத்தித் திறன் பெருகுகிறது.

பண்டைய பழனம்

மேற்கண்டதைப் போலவே மற்ற இடங்களிலும் நடக்கும். அதாவது குறிஞ்சியும் முல்லையும் சந்திக்கும் இடத்திலும், முல்லையும் மருதமும் சந்திக்கும் இடத்திலும் நடக்கும். நமது பண்ணையிலும் இது நடக்கும் குளத்துக்கும் கரையும் சந்திக்கும் இடத்தில் உற்பத்தித் திறன் அதிகம் இருக்கும்.

நமது முன்னோர்கள் இந்த நெய்தல் நிலத்தில் பழனம் என்ற ஒரு தொழில்நுட்ப முறையைப் பின்பற்றி நெல்லையும் மீனையும் சாகுபடி செய்துள்ளனர். மீனும் நெல்லும் ஒரே இடத்தில் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு பழனம் என்று பெயர்.

கொறுக்கை புல் இருந்த வயலில் மீனைப் பிடித்துக் கொன்று உண்ண எடுத்துச் செல்லும் செய்தியை மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது,

(அடுத்த வாரம்: அருகிவிட்ட பண்டைய முறை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்