ஈரநிலங்களின் பாதுகாப்பு ஏன் அவசியம்?

By கவிதா.கி

மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் தம் தேவைக்காகப் பல வகையான சூழலியல் மண்டலங்களைச் சார்ந்துள்ளன. ஏரி, குளம், ஆறு போன்ற அத்தகைய சூழலியல் மண்டலங்களில், ஈரநிலங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஈரநிலங்கள் சுமார் 6 மீட்டர் ஆழத்துக்குக் குறைவான, நிரந்தரமாகவோ குறிப்பிட்ட காலத்திற்கோ முழுவதுமோ அல்லது பகுதியளவோ நீரால் நிரம்பிய நிலப்பகுதி.

ஈரநிலங்களின் வகைகள்: ஈரநிலங்கள் நன்னீர், உவர்நீர் என இரண்டு வகைப்படும். ஏரி, குளம் போன்றவை இயற்கையான நன்னீர் ஈரநிலங்கள்; அணைகள், பெரிய நீர்த்தேக்கங்கள் போன்றவை செயற்கையாக உருவாக்கப்பட்ட நன்னீர் ஈரநிலங்கள். அதைப் போலவே சதுப்புநிலங்கள், உப்பங்கழிகள், காயல்கள், கழிமுகப்பகுதி, கடற்கரை, அலையாத்திகள் போன்றவை இயற்கையான உவர்நீர் ஈரநிலங்கள்; உப்பளங்கள், மீன்-இறால் வளர்ப்புப் பண்ணைகள் போன்றவை செயற்கையாக உருவாக்கப்பட்ட உவர்நீர் ஈரநிலங்கள். வட இந்தியாவில் மட்டுமே இயற்கையான ஏரிகளும் குளங்களும் உள்ளன. தென்னிந்தியாவின் ஏரிகளும் குளங்களும் பெரும்பாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE