காகிதக் கோப்பையும் தீங்கு தரும்

By செய்திப்பிரிவு

காகிதக் கோப்பைகளும் பிளாஸ்டிக் கோப்பைகளைப் போலவே சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று புதிய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஸ்வீடனில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பிஸாஸ்டிக் கோப்பையில் எவ்வளவு நச்சுப் பொருள்கள் உள்ளனவோ, அதே அளவு நச்சு பொருள்கள் காகிதக் கோப்பைகளிலும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆய்வுக் குறித்து கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பேராசிரியர் பெத்தானி கார்னி அல்ம்ரோத் கூறும்போது ”காகிதக் கோப்பைகள், பிளாஸ்டிக் கோப்பைகளை ஈரமான வண்டல் - தண்ணீரில் சில வாரங்களுக்குப் படியவிட்டு அவற்றை ஆய்வு செய்ததில், அந்தக் கோப்பைகளிலிருந்து வெளியான வேதிக் கசிவுகள் வண்ணத்துப்பூச்சி, கொசுவின் தோற்றுவளரிகளின் (லார்வா) வளர்ச்சியை எவ்வாறு எதிர்மறையாக பாதித்தன என்பதை எங்கள் குழு கண்டறிந்தது” எனத் தெரிவித்தார்.

காலநிலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு! - காலநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழல் நெருக்கடி மட்டுமல்ல, மனித உரிமை நெருக்கடியும்கூட. காலநிலைப் பேரழிவால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கிரீஸ் நாடுகளில் இந்த ஆண்டு நிலவிய வெப்ப அலையால் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டனர். காலநிலை மாற்றத்தால் குழந்தைகளின் உரிமைகள் எப்படிச் சமரசம் செய்துகொள்ளப்படுகின்றன, பேரழிவைத் தணிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் காலநிலை தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE