கடலம்மா பேசுறங் கண்ணு 23: உலக வெப்பம் தணிக்கும் கடல்

By வறீதையா கான்ஸ்தந்தின்

 

வெ

ப்ப ஆற்றலுடனான நீரின் பரிவர்த்தனையும் அடர்த்தி வேறுபாடுகளும் கடலின் இயற்பியல் கூறுகளைத் தீர்மானிக்கின்றன.

இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் ஓர் ஆக்ஸிஜன் அணு சேர்ந்தால் கிடைப்பது ஒரு நீர் மூலக்கூறு. ஹைட்ரஜன் நேர்மின்விசை அயனி. ஆக்ஸிஜன் (பிராணவாயு) எதிர்மின்விசை அயனி. மற்ற மூலக்கூறுகளின் எதிர்மின்விசையுடன் ஹைட்ரஜன் அயனி எளிதில் இணைந்துவிடுகிறது. நீர் இயற்கையின் மிகச்சிறந்த கரைப்பானாய் இருப்பதற்கு இது முக்கியமான காரணம்.

ஹைட்ரஜன் அயனிகளின் பிணைப்பினால் நீர் திரவத்தின் மேற்பரப்பு மெல்லிய தோல்போல் இயங்குகிறது. பூச்சிகள் போன்ற சிறு பொருட்கள் அதனுள் அமிழ்ந்துவிடாமல் மேலே மிதப்பதற்கு இந்தப் பரப்பு இழுவிசைதான் (Surface tension) காரணம்.

அடர்த்தி நிலை மாற்றம்

மூலக்கூறுகளின் நெருக்கமான பிணைப்பை ஆக்ஸிஜனுடனோ வேறு கரைபொருட்களுடனோ நீர் எளிதில் உருவாக்கி விடுகிறது. பலவீனமான, ஆனால் எண்ணற்ற ஹைட்ரஜன் பிணைப்புகளின் காரணமாக நீர்த் திரவம் அடர்த்தி மிகுந்தும் ஒட்டும் தன்மை மிகுந்தும் காணப்படுகிறது. வெப்பத்தை உள்வாங்கியும் வெளியேற்றியும் விரிவடையவும் சுருங்கவும் செய்கிறது.

ஹைட்ரஜன் பிணைப்புகளின் விலகலும் சேரலும் பனி உருகி நீராதல், நீர் விரிவடைந்து ஆவியாதல், மறுதிசையில் இயல்பு மாறுதல் என எல்லாமே அடர்த்தி நிலைகளில் ஏற்படும் மாற்றம்தான். வலுவான பிணைப்பிலிருந்து மூலக்கூறுகளைப் பெயர்த்தெடுக்க (நீர் ஆவியாக) நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. நீரின் கொதி நிலை மிக அதிகமாயிருப்பதற்கு (100 டிகிரி செல்சியஸ்) இதுதான் காரணம்.

கடலின் வெப்பநிலை மாற்றம், ஒரே மட்டத்திலுள்ள நீரில் அடர்த்தி நிலை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இப்படி விரிவடையும் நீர்த்திரள் பகுதி நகர்ந்து பரவுவதன் விளைவாக பெருங்கடல் நீரோட்டங்கள் உருவாகின்றன.

மாறுபட்ட பண்பு

கடலின் ஆழம் முழுவதும் ஒரே மாதிரியான வெப்பநிலை நிலவுதில்லை. வெப்ப மண்டலப் பகுதிகளில் மேல்கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கையில், 50 மீட்டர் ஆழத்தில் 8 டிகிரி செல்சியஸ் இருக்கலாம். இடையிலிருக்கும் நீர்த்திரளில் வெப்பநிலை சடுதியாய்த் தாழ்ந்துவிடுகிறது (thermocline).

அதுபோன்றே துருவப் பிரதேசக் கடல்களில் மேல்கடல் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உறைபனியாய்க் கிடக்கையில் அதை ஒட்டிக்கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4 டிகிரி வெப்பநிலையும் அடிக் கடலில் 8 டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் (latent heat capacity) மிக அதிகம். வெப்ப மட்டங்கள் (thermal strata) இதனால்தான் உருவாகின்றன. இந்த மாறுபட்ட பண்பு மட்டும் கடலுக்கு இல்லாதிருந்தால் உலகின் மிகப் பெரிய வாழிடத்தில் உயிர்கள் நீடிக்க முடியாமல் போயிருக்கும்.

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்