அரசு கவின் கலைக் கல்லூரி, திரைப்பட கல்லூரியில் பட்டப்படிப்பு சேர விண்ணப்பிப்பது எப்படி?

By ராகா

கடந்த மே 8ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரி, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் ஆகிய இரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.

கல்வித் தகுதி: இக்கல்லூரிகளில் வழங்கப்படும் நான்கு ஆண்டுக் காலப் பட்டப்படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி நுழைவுத் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு கவின் கலைக் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை https://artandculture.tn.gov.in/node/add/gov-college-of-fine-art-four-yrs என்கிற தளத்தில் பார்க்கலாம். கேட்கப்பட்டிருக்கும் தகவல்களுடன் உரிய ஆவணங்களையும் சேர்த்து இணைய வழியில் விண்ண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு கவின் கலைக் கல்லூரில் வண்ணக்கலை,சிற்பக்கலை, காட்சி வழித் தொடர் வடிவமைப்பு, ஆலையகத் துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் போன்ற இளங்கவின் கலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கூடுதல் விவரங்களுக்கு: https://artandculture.tn.gov.in/node/add/gov-college-of-fine-art-four-yrs

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இளங்கலைக் காட்சிக்கலைப் படிப்புகளில் ஒளிப்பதிவு(Cinematography), எண்மிய இடைநிலை (Digital Intermediate), ஒலிப்பதிவு (Audiography), இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுத்து (Direction and Screenplay writing), படத்தொகுப்பு (Film Editing), உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (Animation and Visual Effects) ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பப் படிவங்களை https://bit.ly/3OrqkTL என்கிற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சேர்த்து 02.06.2023 மாலை 5மணிக்குள் தபால் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113

கூடுதல் விவரங்களுக்கு: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tngmgrfti_application_prospectus_2023_24.pdf

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE