சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

By ராகா

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஒப்பந்த அடிப்படையிலான பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் சென்னையில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

காலிப்பணியிடங்கள்: 82

சம்பள விவரம்: ரூ. 16,000 - ரூ. 70,000

தகுதி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பணியிடத்துக்கான முன்னுரிமை படிப்புகள் குறித்த விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இணையதளத்தைப் (https://www.nie.gov.in/) பார்வையிடவும்.

வயது வரம்பு:

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

முக்கிய தேதி:

பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கும் நாட்கள் குறித்த விவரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுகள் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவன வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வும் தேவை இருப்பின் எழுத்துத் தேர்வும் நடைபெறலாம்.

விதிமுறைகள்:

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை நேர்முகத் தேர்வு அன்று மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். நேர்முகத் தேர்வுக்குப் பதிவுக் கட்டணம் கிடையாது. நேர்முகத் தேர்வு அன்று கேட்கப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.nie.gov.in/images/pdf/careers/NIE-PE-Advt-April-2023-17.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE