மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer) : 418
உதவி ஆணையர் (Assistant Provident Fund Commisioner) : 159
» வியாழனும் வெள்ளியும் வானில் இணையும் அற்புத நிகழ்வு
» இந்திய கிரிக்கெட்டில் இன்று (01-03-1992): காலத்தால் மறக்க முடியாத இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி!
மொத்தக் காலிப்பணியிடங்கள்: 577
தகுதி:
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அமலாக்க அதிகாரி பதவிக்கும், உதவி ஆணையர் பதவிக்கும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.upsconline.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ. 25/-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்களை மார்ச் 17ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 18 முதல் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
தேர்வு மையம்:
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-51-2023-engl-250223.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago