வனத்துறையில் அரசு அதிகாரி வேலை.. உடனே விண்ணப்பிக்கலாம்!

By ராகா

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வனத்துறை அதிகாரி (ஐ.எஃப்.எஸ்.) பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு முதல் நிலை, முதன்மை, நேர்முகம் என மூன்று கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் விவரம்: 150

தகுதி:

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவி அறிவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் அல்லது விவசாயம், வனவியல் அல்லது பொறியியல் துறைகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

2023 ஆகஸ்ட் 1 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.upsconline.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.100/-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பங்களை பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 22 முதல் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வு மையம்:

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-2023-engl-010223.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்