காத்திருக்கும் வங்கிப் பணிகள்… விண்ணப்பங்களை அனுப்பத் தயாரா?

By ராகா

இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட பழமையான வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் நிர்வாகப் பொறுப்புக்காக 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்: 1. தலைமை மேலாளர் (ஸ்கேல் 4) – 50 / 2. மூத்த மேலாளர் (ஸ்கேல் 3) - 200 | மொத்த காலிப்பணியிடங்கள் - 250

தகுதி: இந்தக் காலிப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க இருப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் கண்டிப்பாக இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தலைமை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் வங்கிப் பணியில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவமும், மூத்த மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்குக் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவமும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: தலைமை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 40 வயதுக்கு மிகாமலும், மூத்த மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு வங்கியின் இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: நடைபெற இருக்கும் இணைய வழித் தேர்வுக்கு https://ibpsonline.ibps.in/cbicmsmjan23/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.850/-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதிகள்: இதற்கான் இணைய வழித் தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தேர்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் இணையவழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழித் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்களைக் கணக்கில் கொண்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதனையடுத்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2023/01/Central-Bank-of-India-Recruitment-Senior-Manager-and-Chief-Manager-Posts-Notification.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்