வெளிநாட்டில் படிக்க ஆங்கிலத் தகுதித் தேர்வு கட்டாயமா?

By செய்திப்பிரிவு

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுவாக வெளிநாடுகளில் படிக்க ‘TOEFL’, ‘IELTS’ போன்ற தகுதித் தேர்வுகள் அவசியம். ஆனால், இந்தத் தகுதித் தேர்வுகள் எழுதாமலேயே வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவும் முடியும்.

ஆங்கிலத் தகுதித் தேர்வுகள்: வெளிநாடுகளில் படிக்கவும் வேலைசெய்யவும் பல்வேறு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலத் தகுதித் தேர்வுகள் இருக்கின்றன. இதில் பொதுவாக ‘TOEFL’ தேர்வு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ‘IELTS’ தேர்வு உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் ‘TOEFL’ஐவிட ‘IELTS’ தேர்வைப் பெரிதும் விரும்புகின்றன. இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள ‘dualingo’ தேர்வைப் பல அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. ‘TOEFL’, ‘IELTS’ தேர்வுக் கட்டணங்களைவிட ‘dualingo’வின் கட்டணம் மிகக் குறைவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE