டிச.15: நாட்டில் அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் (46) முதலிடத்திலும் மகாராஷ்டிரம் (43) இரண்டாமிடத்திலும் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிச.16: நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகைசெய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
டிச.17: பெங்களூருவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்றது.
டிச.17: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர் நாகை மு. சொக்கப்பன் தேர்வு செய்யப்பட்டார்.
டிச.17: ஒடிசா கடற்கரையில் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் அணுசக்தி திறன் கொண்ட ‘பலாஸ்டிக் ஏவுகணை அக்னி V’ சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
டிச.18: கத்தாரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 4-2 என்கிற கோல் கணக்கில் பெனால்டி ஷுட் முறையில் பிரான்ஸை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது. சிறந்த வீரராகத் தேர்வான அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்ஸிக்குத் தங்கக் கால்பந்து வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேவுக்குத் தங்கக் காலணி வழங்கப்பட்டது.
டிச.19: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘நம்ம ஸ்கூல்’ எனும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
டிச.22: அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் பதவிக்கு தினேஷ் குமார் சுக்லாவை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்தது.
தொகுப்பு: மிது
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago