நவ.17: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகள் நளினி உள்பட ஆறு பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
நவ.18: நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவ.9: விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியானது.
நவ.20: ஆசிய நாடான கத்தாரில் 22வது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் தொடங்கின. இத்தொடரில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன.
» சிறையில் 35 கிலோ எடை குறைந்த சித்து
» ஊரக வேலை திட்டத்தில் ஊழல்: டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய இடைத்தரகர்
நவ.22: இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாகக் கடல் காற்றாலை ஆய்வு மையத்தை ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரையில் அமைக்க மத்தியக் காற்றாலை நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நவ.23: ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இப்பட்டத்தை வெல்லும் மிக வயதான வீரர் (35) இவர்.
நவ.24: தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியைப் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகத் தமிழக அரசு அறிவித்தது.
நவ.26: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
நவ.26: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘ஓஷன்சாட்-03’ மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
நவ.27: தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31ஆம் தேதி வரை இணைக்கலாம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். - தொகுப்பு: மிது
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago