செப்.25: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலம் விளையாடியவர் இவர்.
செப்.26: திரைத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதின் 2020ஆம் ஆண்டுக்கு நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டார்.
செப்.26: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆர்) புதிய தலைமை இயக்குநராக டாக்டர் ராஜீவ் பால் நியமிக்கப்பட்டார்.
செப்.28: இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டார்.
செப்.29: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் எட்டு துணை அமைப்புகளை மத்திய அரசு ஐந்தாண்டு காலத்துக்குத் தடை செய்தது.
செப்.29: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக புதுச்சேரியைச் சேர்ந்த ஆர். வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டார்.
செப்.29: 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
செப்.29: திருமணம் ஆகாத பெண்களும் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செப்.30: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்து முடிக்கும்வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
47 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago