சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

ஆக.21: இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் முதல் பேருந்து புனே நகரில் தொடங்கப்பட்டது.

ஆக.22: 2020, 2021, 2022ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முறையே தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், தமிழ்ப் பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பிரெஞ்சு அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

ஆக.24: தமிழகத்தைச் சேர்ந்த பி.காளிமுத்து (யுவ புரஸ்கார்), ஜி. மீனாட்சி (பால சாகித்ய புரஸ்கார்) ஆகியோரின் படைப்புகள் உள்பட 45 எழுத்தாளர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது, பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

ஆக.25: உலகிலேயே முதன் முறையாக ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜெர்மனியில் தொடங்கப்பட்டது.

ஆக.27: அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையைச் சர்வதேச காலபந்துக் கூட்டமைப்பான பிஃபா நீக்கியது. இதன் காரணமாக ஏற்கெனவே திட்டமிட்டபடி மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபரில் நடைபெற உள்ளது.

ஆக.27: சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்ற சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் டைமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற வரலாற்றைப் படைத்தார்.

ஆக.28: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்