சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

ஜூலை 9: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் 13 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஜூலை 10: மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகராக ராகுல் நர்வேகர் (45) தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் அரசமைப்பு சார்ந்த ஒரு பதவியை வகிக்கும் இளம் வயது சபாநாயகர் ஆனார்.

ஜூலை 11,12: லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். இது அவருடைய 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

ஜூலை 12: டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் வைக்கப்பட்ட அரசின் தேசியச் சின்னம் திறக்கப்பட்டது.

ஜூலை 12: இந்தியாவிலேயே மிசோராமில் 71 சதவீதப் பெண்கள் மக்கள் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மேலாளர்கள் என உயர் பதவிகளில் இருப்பதாகத் தொழிலாளர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13: பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் வகையில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்த ஒளிப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டது.

ஜூலை 15: தென்கொரியாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ஜூலை 15: தமிழ், மலையாளப் படங்களின் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் காலமானார்.

ஜூலை 15: இலங்கையில் மக்கள் போராட்டத்தையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்