டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 1) அன்று பகுதி - 27இல் ‘தமிழ்நாடு - 6 விடுதலை’ (போராட்டம் - 1) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘பொது - 6 வேதியியல்’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
பொது - 6 வேதியியல்
1. கீழ்க்கண்டவற்றுள் அடர்த்தி மிகுந்த தனிமம் எது?
அ. ஹைட்ரஜன்
ஆ. வைரம்
இ. ஆஸ்மியம்
ஈ. கார்பன்
2. விண்மீன்களில் உள்ள முக்கிய தனிமங்கள் எவை?
அ. ஹீலியம், கார்பன்
ஆ. ஹீலியம், ஹைட்ரஜன்
இ. ஹீலியம், நைட்ரஜன்
ஈ. ஹைட்ரஜன், நைட்ரஜன்
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 27
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 26
3. ஏறுவரிசையில் அடர்த்தி மிகு தனிமங்களை வரிசைப்படுத்துக:
1. வெள்ளி 2. தங்கம்
3. பாதரசம் 4. பிளாட்டினம்
அ. 3 1 2 4 ஆ. 3 1 4 2
இ. 1 2 3 4 ஈ. 2 1 4 3
4. பொருத்துக:
A. சமையல் சோடா - 1. சோடியம் கார்பனேட்
B. சலவை சோடா - 2. சோடியம் பை கார்பனேட்
C. சலவைத்தூள் - 3. கால்சியம் ஆக்ஸைடு
D. சுட்ட சுண்ணாம்பு - 4. கால்சியம் ஆக்ஸி குளோரைடு
அ. A-1 B-2 C-3 D-4
ஆ. A-1 B-2 C-4 D-3
இ. A-2 B-1 C-3 D-4
ஈ. A-2 B-1 C-4 D-3
5. 1869ஆம் ஆண்டு முதல் தனிம அட்டவணையைத் தயார் செய்த மெண்டலீவ் எந்நாட்டு அறிவியலறிஞர்?
அ. ஜெர்மனி
ஆ. இங்கிலாந்து
இ. ரஷ்யா
ஈ. போலந்து
6. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. நீச்சல்குளம் சுத்தம் செய்ய - ஃபுளோரின்
ஆ. விழாப் பலூன்களில் நிரப்பப்படும் வாயு - ஹீலியம்
இ. டங்ஸ்டன் விளக்குகள் - ஆர்கான்
ஈ. விளம்பரக் குழல் விளக்குகள் - நியான்
7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. கத்திரிக்காய் - அஸ்கார்பிக் அமிலம்
ஆ. ஆப்பிள் - மாலிக் அமிலம்
இ. தக்காளி - டார்டாரிக் அமிலம்
ஈ. வினிகர் - அசிட்டிக் அமிலம்
8. அனைத்து அமிலங்களுக்கும் அடிப்படையில் தேவையான தனிமம் எது?
அ. ஹைட்ரஜன்
ஆ. ஆக்சிஜன்
இ. நைட்ரஜன்
ஈ. கந்தகம்
9. உலகில் மிகவும் வலிமையானதாகக் கருதப்படும் அமிலம் எது?
அ. நைட்ரிக் அமிலம்
ஆ. கந்தக அமிலம்
இ. ஹைடிரோ குளோரிக் அமிலம்
ஈ. ஹைடிரோ புளுரோ கந்தக அமிலம்
10. தாவரச் சாம்பல் எனப் பொருள்படும் ஆல்கலி என்கிற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது?
அ. லத்தீன்
ஆ. கிரேக்கம்
இ. அரேபியம்
ஈ. சீனம்
11. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. முடிச்சாயம் - சில்வர் நைட்ரேட்
ஆ. எலும்பு முறிவு - பாரிஸ் சாந்து
இ. பட்டாசு தயாரிப்பு - சோடியம் நைட்ரேட்
ஈ. தோல் பதனிடுதல் - சோடியம் பென்சாய்ட்
12. உடலிலேயே மிகவும் கடினமான பகுதியான பற்களின் எனாமலில் உள்ள சேர்மத்தின் பெயர் யாது?
அ. கால்சியம் பாஸ்பேட்
ஆ. மக்னீசியம் சல்பேட்
இ. சோடியம் பாஸ்பேட்
ஈ. கால்சியம் சல்பேட்
13. வீட்டில் பயன்படுத்தப்படும் அமோனியாவின் pH மதிப்பு என்ன?
அ. 7 ஆ. 10
இ. 12 ஈ. 15
14. இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்த அறிவியலறிஞர் ஹென்றி பெக்கோரல் எந்த வருடம் நோபல் பரிசு பெற்றார்?
அ. 1901 ஆ. 1902
இ. 1903 ஈ. 1905
15. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. அதிக மின்கடத்துத் திறன் - வெள்ளி
ஆ. மிக அதிக உருகுநிலை - டங்ஸ்டன்
இ. மிக லேசானது - லித்தியம்
ஈ. அதிக எடையுள்ளது - இரும்பு
16. கார்பனின் புறவேற்றுமை வடிவமான வைரம் எதனால் ஜொலிக்கிறது?
அ. ஒளி விலகல்
ஆ. ஒளி முழு அக எதிரொளிப்பு
இ. ஒளி எதிரொளிப்பு
ஈ. எதுவுமில்லை
17. கீழ்க்கண்டவற்றுள் எது சல்பைடு தாது?
அ. ஹேமடைட்
ஆ. பாக்சைட்
இ. சின்னபார்
ஈ. காலமைன்
18. எப்சம் உப்பின் வேதிப்பெயர் யாது?
அ. கால்சியம் சல்பேட்
ஆ. மக்னீசியம் சல்பேட்
இ. பேரியம் சல்பேட்
ஈ. அமோனியம் சல்பேட்
19. சிரிப்பூட்டும் வாயு எனப்படுவது எது?
அ. நைட்ரஸ் ஆக்சைடு
ஆ. நைட்ரிக் ஆக்சைடு
இ. நைட்ரஜன் பர் ஆக்சைடு
ஈ. எதுவுமில்லை
20. நீராவி விசையாழியைக் கண்டறிந்த அறிவியலறிஞர் யார்?
அ. ஜேம்ஸ் வாட்
ஆ. ஹம்பி டேவி
இ. பார்சன்ஸ்
ஈ. ஹேபர்
பகுதி 27இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்
1. ஆ. பூலித்தேவன்
2. இ. கி. பி. 1767
3.. அ. கி. பி.1792
4. ஈ. 16-10-1799
5. ஈ. திருச்சிராப்பள்ளி
6. அ. திருப்பத்தூர்
7. இ. வில்லியம் பெண்டிங்
8. ஆ. வி.டி. சவார்க்கர்
9. இ. ரெங்கையா நாயுடு
10. அ. பக்ருதீன் தியாப்ஜி
11. ஆ. விஜயராகவாச்சாரியார்
12. இ. நீலகண்ட பிரம்மச்சாரி
13. ஈ. வ.உ.சிதம்பரனார்
14. ஈ. கொல்கத்தா
15. இ. ராஜகோபாலாச்சாரியார்
16. ஆ. சென்னை
17. இ. வேதாரண்யம்
18. அ. ராமலிங்கம் பிள்ளை
19. ஆ. காமராஜர்
20. இ. மும்பை
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago