டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (ஜூன் 1) அன்று பகுதி - 14இல் ‘பொது-4’ (இயற்பியல் - 1) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘நுண்ணறிவு - 1’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
நுண்ணறிவு - 1
1. இந்தியா: ஹாக்கி :: அமெரிக்கா: ?
அ) கிரிக்கெட் ஆ) பேஸ்பால்
இ) ஹாக்கி ஈ) டென்னிஸ்
2. களிறு: பிடி : : கலை: ?
அ) பிணை ஆ) பெட்டை
இ) பாட்டி ஈ) மறி
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 14
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 13
3. ஆசிரியர்: பள்ளிக்கூடம் : : ஆராய்ச்சியாளர்: ?
அ) கல்லூரி ஆ) ஆய்வுக்கூடம்
இ) விண்வெளி ஈ) அலுவலகம்
4. அடுத்த தொகுதி எது?
B D F, H J L, N P R, ?
அ) S U W ஆ) T U W
இ) T V X ஈ) S V X
5. அடுத்த தொகுதி எது?
C E H, I K N, O Q T, ?
அ) U W Y ஆ) U V Y
இ) U W Z ஈ) U V W
6. ‘M A T H E M A T I C S’ - என்ற வார்த்தையில் முதல் மற்றும் ஏழாம் எழுத்துக்களை ஏழாம் மற்றும் முதல் எழுத்துக்களாக மாற்றியும் இரண்டாம் மற்றும் எட்டாம் எழுத்துக்களை எட்டாம் மற்றும் இரண்டாம் எழுத்துக்களாகவும் மாற்றி எழுதியதுபோல் கடைசியாக ஐந்து மற்றும் பதினோராவது எழுத்துக்களை பதினோராவது மற்றும் ஐந்தாம் எழுத்துக்களாக எழுதினால் கிடைக்கும் புதிய வார்த்தையில் வலமிருந்து இடமாக இருக்கும் எட்டாம் எழுத்து எது?
அ) I ஆ) T
இ) M ஈ) C
7. D E A R எனும் வார்த்தையை E G D V என குறித்தால், F R I E N D என்ற வார்த்தையை அதே முறையில் எவ்வாறு குறிப்பிடவேண்டும்?
அ) G S J F O E ஆ) G T L I S J
இ) G S K I S J ஈ) G S K I S I
8. ஒரு வரிசையில் முருகன் என்பவர் இடமிருந்து வலமாக 17ஆவது நபராகவும், வலமிருந்து இடமாக 19ஆவது நபராகவும் இருந்தால் அவ்வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை யாது?
அ) 36 ஆ) 37
இ) 35 ஈ) 34
9. தரவரிசைப் பட்டியலில் 38 மாணவ மாணவியரைக் கொண்ட ஒரு வகுப்பில் வசந்தா தரவரிசைப் பட்டியலில் எட்டாவதாகவும், சரவணன் அதே பட்டியலில் கடைசியிலிருந்து எட்டாவது தரமாகவும் உள்ளனர் எனில் வசந்தா, சரவணன் இருவருக்கும் இடையே தர வரிசையில் எத்தனை நபர்கள் உள்ளனர்?
அ) 21 ஆ) 20
இ) 23 ஈ) 22
10. இன்று இரவு 8.50 மணிக்கு நிமிட முள்ளுக்கும் மணி முள்ளுக்கும் இடைப்பட்ட கோணம் யாது?
அ) 50° ஆ) 65°
இ) 45° ஈ) 35°
11. காலை 7மணிக்கும் 7.30மணிக்கும் இடையில் எந்த நேரத்தில் இரண்டு முள்களும் 100° கோணத்தை உருவாக்கும்?
அ) 7-25 ஆ) 7- 15
இ) 7- 20 ஈ) 7 - 22
12. கீழ்க்கண்ட தொடரில் அடுத்த எண் யாது?
0, 7, 26, 63, 124, ?
அ) 214 ஆ) 215
இ) 216 ஈ) 217
13. A என்பவர் B இன் சகோதரர். B என்பவர் C இன் சகோதரர் எனில் C என்பவர் A க்கு என்ன உறவு?
அ) சகோதரர் ஆ) சகோதரி
இ) சகோதரர் அல்லது சகோதரி
ஈ) ஏதும் இல்லை
14. ஒரு வரிசையில் நீங்கள் இருபுறமிருந்தும் 21 ஆவது நபராக இருப்பின் அவ்வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை யாது?
அ) 42 ஆ) 43
இ) 40 ஈ) 41
15. கீழ்க்கண்ட தொடரில் அடுத்த எண் யாது?
2, 5, 11, 20, 32, ?
அ) 47 ஆ) 43
இ) 45 ஈ) 46
16. கீழ்க்கண்ட தொடரில் பொருந்தாத ஒன்றினை கண்டுபிடிக்க:
190, 166, 145, 128, 112, 100
அ) 166 ஆ) 145
இ) 128 ஈ) 112
17. அடுத்த தொகுதி எது?
AB3, CD7, EF11, ?
அ) GH16 ஆ) GH14
இ) GH13 ஈ) GH15
18. அடுத்த தொகுதி எது?
A Y D, B V F, D R I, ?
அ) G M M ஆ) F K M
இ) G L M ஈ) F M M
19. கேள்விக்குறி(?) உள்ள இடத்தில் எந்த எண் இருக்கவேண்டும்?
8 3 55
10 5 75
7 4 ?
அ) 66 ஆ) 45
இ) 35 ஈ) 33
20. கீழ்க்கண்ட எழுத்துத் தொடரில் கோடிட்ட இடங்களில் வரக்கூடிய எழுத்துக்களின் தொகுப்பு யாது?
bba_ cbb_ ccb_accbba_c
அ) cabc ஆ) cabb
இ) acbc ஈ) aabc
பகுதி 14இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்
1. இ. - 273°C
2. இ. திண்மக்கோணம் - ரேடியன்
(ஸ்டிரிடியன்)
தளக்கோணம் - ரேடியன்
3. ஈ. மோல்
4. ஆ. அதிர்வெண்
5. அ. 3.26 (ஒரு ஒளி வருடம் என்பது ஒளியானது ஒரு வருடத்தில் வெற்றிடத்தில் செல்லும் தொலைவு)
6. ஈ. அணுக் கடிகாரம்
7. ஆ. பைரோஹீலியோ மீட்டர்
8. அ. 375°C மற்றும் - 39°C
9. ஈ. ஒரு குதிரைத்திறன் = 786 வாட் (746 வாட்)
10. இ. ஒயர்ஸ்டெட்
11. ஈ. 500நொடிகள்
12. அ. ஒளி விலகல்
13. ஆ. பெரிஸ்கோப்
14. இ. பிளான்ட்டிமீட்டர் -
அடர் அளவி ( பரப்பளவி)
15. ஈ. லாக்டோமீட்டர் - ஈரப்பதங்காட்டி (பாலின் ஒப்படர்த்தி காண)
16. இ. தேசிய தோல் ஆராய்ச்சி மையம் - கான்பூர் (சென்னை)
17. ஆ. தேசிய அறிவியல் உபகரணங்கள் அமைப்பு - புனே (சண்டிகர்)
18. இ. சனி
19. ஆ. 109
20. அ. ஐசோபார்
தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago