சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

மே 19: பாலியல் தொழிலாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 22: செசபிள்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்சல்னை இரண்டாம் முறையாகத் தோற்கடித்தார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.

மே 23: குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற விதிமுறையை பெல்ஜியம் முதன் முறையாக அறிமுகப்படுத்தியது.

மே 24: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு முன்பு 1942 - 45 வரையிலான காலகட்டத்தில் மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.

மே 25: கரோனாவால் இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத குவாட் (ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா) தலைவர்களின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்றது.

மே 25: உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பதவியில் 2027 வரை அவர் இருப்பார்.

மே 26: சென்னையில் நடைபெற்ற விழாவில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

மே 27: இலங்கையில் எரிபொருள் நெருக்கடி, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் பொறுப்பையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்