சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

மே 9: ஹரியாணாவின் ராக்கிகரி பகுதியில் இந்தியத் தொல்லியல் துறை தொடங்கியுள்ள அகழாய்வில் 5,000 ஆண்டுக்கு முந்தைய தங்க நகைத் தொழிற்சாலை செயல்பட்டது கண்டறியப்பட்டது.

மே 9: வங்கக் கடலில் உருவான புயலுக்கு இலங்கை வழங்கிய ‘அசானி’ என்கிற பெயர் சூட்டப்பட்டது. புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் -நர்சாபுரம் அருகே கரையைக் கடந்தது.

மே 10: தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மே 11: ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி உள்பட நான்கு ஒளிப்படக் கலைஞர்களுக்கு புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மே 11: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கலவரத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

மே 12: நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 எம்.பி. பதவிகளுக்கு ஜூன் 10 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மே 14: இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா ஓய்வு பெறுவதையடுத்து அந்தப் பொறுப்புக்கு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்