டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- பகுதி 3

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 4) அன்று பகுதி-2இல் 15 வினாக்களை வெளியிட்டிருந்தோம். இதோடு தமிழ்நாடு-1 என்கிற தலைப்பின் கீழ் 30 வினாக்கள் நிறைவடைகின்றன. இன்றைய பகுதியில் இந்தியா -1 என்னும் புதிய தலைப்பில் முதல் 15 வினாக்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்தியா-1
(குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

1. இந்தியாவில் முதன்முதலில் தொடர்ந்து இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) வெங்கட்ராமன்
ஈ) ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

2. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

3. இந்தியாவில் முதன்முதலாக தனது பிரதமர் பதவியை பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தவர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) மொரார்ஜி தேசாய்
ஈ) லால் பகதூர் சாஸ்திரி

4. இந்தியாவில் தனது பிரதமர் பதவிக் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கமுடியாமல் போன முதல் பிரதமர் யார்?
அ) ஐ.கே. குஜ்ரால்
ஆ) சந்திரசேகர்
இ) தேவகௌடா
ஈ) சரண்சிங்

5. சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

6. காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களில், தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த முதல் பிரதமர் யார்?
அ) மொரார்ஜி தேசாய்
ஆ) நரசிம்ம ராவ்
இ)அ.பி. வாஜ்பாய்
ஈ) வி.பி. சிங்

7. சுதந்திர இந்தியாவின் முதல் இளம் பிரதமர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) ராஜீவ் காந்தி
ஈ) வி.பி.சிங்

8. அறுதிப் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிரதமர் யார்?
அ) இந்திராகாந்தி
ஆ) சந்திரசேகர்
இ) ஐ.கே.குஜ்ரால்
ஈ) அ.பி.வாஜ்பாய்

9. இந்தியாவில் முதன்முதலில் துணைப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சரண் சிங்
இ) தேவிலால்
ஈ) லால் கிருஷ்ண அத்வானி

10. இந்தியாவில் அரசமைப்பு 352 விதியின்படி 1975 ஆம் வருட நெருக்கடிநிலை பிரகடனத்தின் போது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வெங்கட்ராமன்
ஆ) ஜாகீர் உசேன்
இ) பக்ருதீன் அலி அகமது
ஈ) ஜெயில் சிங்

11. சுதந்திர இந்தியாவில் இருமுறை இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

12. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

13. இந்தியாவில் முதன் முதலில் இருமுறை தொடர்ந்து துணைக் குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வி.வி.கிரி
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

14. உச்ச நீதிமன்ற தலைமை நீதீபதியாகவும், துணைக்குடியரசுத் தலைவராகவும், தற்காலிக குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?
அ) ஜாகீர் உசேன்
ஆ) ஜாட்டி
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சி. ராஜகோபாலாச்சாரி
இ) மௌன்ட் பேட்டன் பிரபு
ஈ) ராஜேந்திர பிரசாத்

**

கடந்த பகுதியில் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்


16. ஆ. பரத நாட்டியம்

17. இ. கி.பி. நான்காம்

18. அ. கி.பி. எட்டாம்

19. ஆ. அபராஜிதன்

20. ஆ. அபராஜிதன்

21. ஆ. 11 - 03 - 1970

22. அ. 17 - 12 - 2021

23. ஆ. கரந்தை தமிழ்ச்சங்கம்
(1914 முதல்)

24. ஈ. மனோன்மணியம்
பெ. சுந்தரனார்

25. அ. கி.பி. 1891

26. இ. ம.சு. விஸ்வநாதன்

27. ஆ. வாய்மையே வெல்லும்

28. அ. வரையாடு

29. ஆ. 1972

30. இ. 31

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்