ஜன.29: 2019-20ஆம் நிதியாண்டில் தேசியக் கட்சிகளின் சொத்துக் கணக்கு அடிப்படையில் பாஜக ரூ. 4,874 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஜன.30: சீனாவில் 'நியோகோவ்' என்கிற புதிய கரோனா வைரஸ் வகை வௌவால்களிடம் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜன.30: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பட்டத்தை ஸ்பெயினின் ரஃபேல் நடால் வென்றாா். இதன்மூலம் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று நடால் சாதனை புரிந்தார்.
ஜன.31: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
பிப்.1: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்
2022-23ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
பிப்.2: ‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டது.
பிப்.3: நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார்.
பிப்.4: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவராக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம்.ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிப்.4: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
பிப்.5: நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டியது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago