மருத்துவக் கனவை நனவாக்கும் துணை மருத்துவப் படிப்புகள்

By நிஷா

குறைவான இடங்கள், அபரிமித போட்டி, கல்விக் கட்டணம் போன்ற காரணங்களால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது இல்லை. வாய்ப்பு கிடைக்காத பலர், பெரும் ஏமாற்றத்துடன் ஏதோ ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர். தங்களின் வாழ்க்கையையும் அதற்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்கின்றனர். இந்த அணுகுமுறை சரிதானா என்றால், கண்டிப்பாகச் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம், மருத்துவத்துறை என்பது ஒரு பெருங்கடல். அது மருத்துவர்களால் மட்டும் நிறைவடைவது இல்லை. அங்கே மருத்துவருக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற பலர் உள்ளனர். மருத்துவமனைகளில் அவர்கள் இல்லாமல், மருத்துவர்களால் உரிய சிகிச்சை அளிக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அதற்குரிய படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகள் என்றழைக்கப்படுகின்றன. மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழப்பவர்கள், இந்தத் துணை மருத்துவப் படிப்புகளைத் தேர்வுசெய்து படிப்பதன் மூலம் தங்கள் மருத்துவக் கனவை மெய்ப்பித்துக்கொள்ள முடியும்.

துணை மருத்துவப் படிப்புகளின் வகைகள்

துணை மருத்துவப் படிப்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் பட்டப் படிப்புகள், இரண்டாவது டிப்ளமோ படிப்பு, மூன்றாவது சான்றிதழ் படிப்புகள். துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்தவுடன் நடத்தப்படுகிறது. ஆகையால், மாணவர்கள் தொடர்ந்து நாளிதழை அல்லது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தைப் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

தொழில்சார் படிப்புகள்

துணை மருத்துவப் படிப்புகளில் பி.ஃபார்ம், பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரபி படிப்புகள் தொழில்சார் படிப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கான காலம் நான்கு ஆண்டுகள். இதை முடித்தவுடன் ஓராண்டுப் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 3000 மட்டுமே.

ரேடியாலஜி டெக்னாலஜி

கதிரியக்கத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் படிக்கும் படிப்பு இது. மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள், அவற்றின் செயல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்தப் படிப்பு உதவுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.

கண்நலத்துக்கான படிப்புகள்

கண்களின் அமைப்பு, அதன் செயல்பாடுகளைப் பற்றிப் படிக்கும் படிப்பு அப்டோமெட்ரி எனப்படும். பார்வைக் குறைபாடு தொடர்பான பரிசோதனைகள், கண் நோய்களைக் கண்டறியும் முறைகள், கண் சிகிச்சை முறைகள் பற்றி இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது.

கண் பரிசோதகருக்கான துணை மருத்துவப் படிப்பு (பி.எஸ்சி., அப்டோமெட்ரி) சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவ நிறுவனத்தில் உள்ளது. இந்தப் படிப்பு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்து தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது சிறப்பு. கண் பரிசோதகருக்கான இரண்டு ஆண்டு கால பட்டயப் படிப்பு (DIPLOMA IN OPTOMETRY) பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இந்தப் படிப்பை முடிப்பவர்கள் Optician ஆகலாம்.

பல் மெக்கானிக்

பல் மருத்துவத் துறையில் தொழில்நுட்ப உதவியாளராவதற்கான டென்டல் மெக்கானிக், டென்டல் ஆபரேடிங் ரூம் அசிஸ்டன்ட் உள்ளிட்ட சில டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு இந்த டிப்ளமோ படிப்புகளைப் படித்தால் பல் மருத்துவரிடம் உதவியாளர் வேலைவாய்ப்புப் பெறலாம்.

மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி

மருத்துவ ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் மூலம் நோய்களைக் கண்டறிதல், நோயினைப் பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் தேவையான பரிசோதனைகளைச் செய்துகொடுத்தல் போன்றவற்றைக் கற்பிக்கும் படிப்பு இது.

உடனடி வேலை

மருத்துவத் துறையில் துணை மருத்துவப் படிப்புகளில் தொழில்நுட்பம் படிப்பவர்களுக்குப் பல்நோக்கு மருத்துவமனைகளில் (Multi speciality Hospital) வாய்ப்புகள் குவிந்து கிடக் கின்றன. தகுந்த ஆட்கள் இல்லாததால் பல மருத்துவமனைகளே பயிற்சிக் கல்வி நிறுவனங்களை நடத்திவருவதையும் கவனிக்க வேண்டும். பல்நோக்கு லேப் டெக்னீஷியன்களுக்கு ரூ. 20,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்பில் சேர்ந்து படிப்பது உடனடியாக வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும்.

துணை மருத்துவப் படிப்புகளில் தொழில்சார் படிப்புகள்

1. பி.எஸ்சி., நர்சிங்

2. பிசியோதெரபி இளங்கலை

3. BPharm (இளங்கலை மருந்தகம்)

4. BOT - இளங்கலைத் தொழில் சிகிச்சை

5. BMRSc – இளங்கலை மருத்துவப் பதிவு அறிவியல், இளங்கலை மருத்துவ அறிவியல்

இதர துணை மருத்துவப் படிப்புகள்

1. BSc – Accident1. BSc – Accident & Emergency Care Technology
2. BSc - Audiology & Speech-Language Pathology
3. BSc – Cardiac Technology
4. BSc – Cardio Pulmonary Perfusion Care Technology
5. BSc – Critical Care Technology
6. BSc – Dialysis Technology
7. BSc – Electro Neurophysiology
8. BSc – Medical Lab Technology
9. BSc – Medical Sociology
10. BSc – Nuclear Medicine Technology
11. BSc – Operation Theater & Anesthesia Technology
12. BSc – Optometry Technology
13. BSc – Physician Assistant
14. BSc – Prosthetics & Orthotics
15. BSc – Radiology Imaging Technology
16. BSc – Radiotherapy Technology
17. BSc – Anesthesia Technology
18. BSc – Cardiac Perfusion Technology
(CPI)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்