செப்.24: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வகுக்க கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
செப்.25: உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநராக உள்ள எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை, அந்தப் பதவிக்கு இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிந்துரைத்துள்ளன.
செப்.26: இந்தியாவின் முதல் விளையாட்டுத் துறை நடுவண் தீர்ப்பாயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
செப்.26: செக் குடியரசில் நடைபெற்ற ஆஸ்ட்ராவா ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் ஷுவாய் ஜங் இணை பட்டம் வென்றது.
செப்.27: அமெரிக்காவின் டகோடா மாகாணத்தில் உள்ள யாங்டன் நகரில் நடந்த 2021 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.
செப்.27: ஆயுஷ்மான் பாரத் என்கிற தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டையையும் பதிவேட்டையும் உள்ளடக்கியது இத்திட்டம்.
செப்.28: சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
செப்.28: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றார்.
செப்.29: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
அக்.1: போலீஸ், அதிகாரிகளின் கொடுமைகள் குறித்து சாமானியர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆதரவாக இருக்கும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago