ஜூலை 30: உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்டது. ரத்தினபுரா பகுதியில் கிணறு தோண்டும்போது இது கிடைத்தது.
ஜூலை 31: பொறியியல் படிப்புகள் பிராந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜூலை 31: நாட்டில் முதன் முறையாக இந்திய சைகை மொழிக்கு மொழிப் படிப்புக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 31: ஒலிம்பிக் ஹாக்கியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனையானார்.
ஆக.1, 2: ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அணி 49 ஆண்டுகளுக்குப் பிறகும் மகளிர் ஹாக்கி அணி முதன் முறையாகவும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
ஆக. 2: ஒலிம்பிக் வரலாற்றில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெகான் நான்கு தங்கம் உள்பட ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
ஆக. 4: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை வெல்டர் வெயிட் பிரிவில் இந்தியாவின் லவ்லீனா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆக. 5: ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்தத்தில் சுஷில்குமாருக்குப் பிறகு வெள்ளி வென்ற வீரரானார் ரவிக்குமார்.
ஆக. 5: அரசியலமைப்புச் சட்டம் 161-பிரிவின் கீழ் ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் கைதிகளை முன்பே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக. 5: ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.
ஆக. 6: விளையாட்டில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்கிற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 mins ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago