உயர் கல்விக்கு உதவும் வழிகாட்டி

By செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்றுப் பேரிடரால் மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது தமிழ்நாடு அரசு. அதேநேரம், அவர்களின் உடல் நலனிலும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்தது.

விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண்களையும் வழங்கவிருக்கிறது. மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்குப் பெரிதும் உதவும் வகையில் இந்த விகிதாச்சார அடிப்படையிலான மதிப்பெண்கள் வழங்கும் முறை இருக்கும் என்று கல்வியாளர்களும் வரவேற்றுள்ளனர். அடுத்து மாணவர்கள் என்ன படிக்கலாம், எந்தத் துறையில் தங்களின் உயர் கல்வியைத் தொடரலாம் என்பதற்கு உதவும் வகையில்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டைத் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அனைத்துத் துறை சார்ந்த கல்லூரிகள் மற்றும் அங்கே கற்பிக்கப்படும் படிப்புகள் குறித்த விவரங்கள், தேசிய நிறுவனங்களால் அளிக்கப்படும் படிப்புகள் குறித்த விவரங்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் அவற்றில் வழங்கப்படும் படிப்புகள் குறித்த விவரங்கள், மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தவிர, வணிகவியல், கலைப் பிரிவுகளில் பல்வேறு துறை சார்ந்த படிப்புகள், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்கள், தொலைதூரக் கல்வி குறித்த விவரங்கள், கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கான வழிகள், சுய வேலைவாய்ப்புத் தேடல்களுக்கான தீர்வுகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பணியைப் பெறுவதற்கான போட்டித் தேர்வுகளில் பங்கெடுப்பது தொடர்பான ஆலோசனைகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் தங்களின் கல்வித் தகுதியை முறையாகப் பதிவது எப்படி என்பது போன்ற தகவல்களும் இதில் உள்ளன.

கையேட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ள: https://bit.ly/3y2Wk4P

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்