சேதி தெரியுமா?

By செய்திப்பிரிவு

பிப்.21: நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறக்கப்பட்டது. திருவனந்தபுரத்துக்கு அருகே மங்களாபுரத்தில் டிஜிட்டல் அறிவியல், புத்தாக்க, தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் என்கிற பெயரில் இது அமைந்துள்ளது.

பிப்.22: புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.

பிப்.22: ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் தலைவாசலில் 1,100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,022 கோடி செலவில் திறக்கப்பட்டுள்ளது.

பிப்.23: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

பிப்.25: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (77 டெஸ்ட் போட்டி) 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.

பிப்.25: 9 முதல் 11-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிப்.26: அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 தேர்தல் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

40 secs ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்