பிப்.4: மியான்மர் ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. மியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது இது 3-வது முறை. முதன்முறையாக 1962-ல் ராணுவப் புரட்சி நடைபெற்றது.
பிப்.5: இந்தியாவில் முதல் பனிக்குடில் உணவகம் (இக்ளு கஃபே) காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் அமைக்கப்பட்டது. இது பிர் பஞ்சால் மலைத்தொடரில் 2,650 மீட்டர் உயரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப் பெரிய பனிக்குடில் உணவகம்.
பிப்.6: இமாச்சலப் பிரதேச அமைச்சரவையின் மொத்த செயல்பாட்டையும் காகிதமற்ற பணியாக அந்த மாநில அரசு மாற்றியது. இதன்மூலம் நாட்டின் முதல் மின் அமைச்சரவை என்கிற பெருமையை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை பெற்றது.
பிப்.7: உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றில் பனிச்சரிவும் திடீர் வெள்ளப்பெருக்கும்
ஏற்பட்டது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
பிப்.8: தமிழகத்தில் மேக மலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய காட்டுப்பகுதி சரணாலயங்களுக்குப் புலிகள் காப்பக அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இது தமிழகத்தின் 5-வது, நாட்டின் 51-வது புலிகள் காப்பகம்.
பிப்.9: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago