போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான ‘Ready Reckoner’ என்று இந்து தமிழ் இயர்புக் 2021-யை சொல்லலாம். முக்கியமான தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டு, ஏற்கெனவே விரிவாகப் படித்தவற்றை சுருக்கமாக திருப்பிப்பார்ப்பதற்கு உதவுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய பல பகுதிகள் உள்ளன.
இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா தொடங்கி இந்தியவியல் ஆய்வுகளில் முக்கியமான பங்களிப்புகளை அளித்துவரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். வரை நாடு முழுவதும் நிர்வாகக் கட்டமைப்பில் பெரும்பங்காற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பற்றிய ’ஐ.ஏ.எஸ். மூலம் இந்தியாவைத் திருத்தி எழுதியவர்கள்’ என்னும் தொகுப்பு இந்த நூலின் சிறப்புகளில் ஒன்று.
‘உலகம்’ பகுதியில் உலக நாடுகளைப் பற்றிய முக்கியத் தரவுகளும் நேர்த்தியான சின்னசின்னக் குறிப்புகளும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய பகுதி. மொழி சார்ந்த கட்டுரைகள் பொதுவாக அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டியவை. சூழலியல், மருத்துவம் தொடர்பான பகுதிகளில் அத்துறைகளின் நவீன மாற்றங்களையும், அண்மைக் கால பிரச்சினைகளையும் விரிவாக விவரிக்கும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு பரிந்துரைக்கக்கூடிய நூலாக ‘இந்து தமிழ் இயர்புக்’ உள்ளது.
அந்தத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. திருக்குறள் சார்ந்து பதிலளிக்க வேண்டிய கேள்விகள், தமிழ்நாடு நிர்வாகம், தமிழ் அரசியல் இயக்கங்களின் வரலாறு, தமிழ் அரசியல் தலைவர்களின் சமூகப் பங்களிப்பு ஆகியவை குறித்து அதிக கேள்விகள் கேட்கப்படும். எனவே, வரும் ஆண்டுகளில் இந்தத் தலைப்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டால் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்தமாகப் இயர்புக்கின் தேவைகளை முற்றிலும் நிறைவுசெய்து, நேர்த்தியான வடிவமைப்போடு படிப்பதற்கும் மிக நல்ல அனுபவமாக அமைந்துள்ளது ‘இந்து தமிழ் இயர்புக் 2021’.
- வி.பி.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ், ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
51 mins ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago