தொகுப்பு: மிது
டிச.23: ஜெர்மனியில் நடைபெற்ற கொலோன் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
டிச.24: மூத்த சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்ச் சமூக மரபு சார்ந்த ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர்.
டிச.26: தமிழகத்தில் 2021 மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்கு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டிச. 26: அருணாசலப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, தெலங்கானா, கேரளம், ஒடிசா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கேலோ இந்தியா சிறப்பு மையங்களைத் திறந்துள்ளது.
டிச.28: கேரளத்தின் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார். 21 வயதான இவர், இந்தியாவின் இளம் மேயர் என்கிற சிறப்பை பெற்றார்.
டிச.28: டெல்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை தொடங்கப்பட்டது.
டிச.31: சென்னை உயர்நீதி மன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜன. 2: நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
48 mins ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago