சேதி தெரியுமா?

By செய்திப்பிரிவு

டிச.16: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 306 வாக்குகளுடன் பெற்ற வெற்றியை அந்நாட்டு தேர்தல் குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்மூலம் ஜனவரி 20 அன்று ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்பது உறுதியானது.

டிச.17: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

டிச.19: 2020-ம் ஆண்டின் சிறந்த ஃபிபா கால்பந்து விளையாட்டு வீரராக போலந்தைச் சேர்ந்த ராபர்ட் லீவாண்டோஸ்கி தேர்வு செய்யப்பட்டார்.

டிச.23: வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) தேர்தலில் வாக்களிக்க வசதியாக அஞ்சல் வாக்குகளைச் சோதனை அடிப்படையில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

டிச.20: தைப்பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2,500 பொங்கல் தொகுப்புப் பரிசு வழங்கப்பட உள்ளது.

டிச. 21: சனிக் கோளும் வியாழன் கோளும் ஒரே நேர்க்கோட்டில் நெருங்கிவந்தன. 400 ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. கடைசியாக 1623 ஜூலை 16 அன்று இக்கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் நெருங்கி வந்தன. மீண்டும் 2080-ம் ஆண்டு மார்ச் 15-ல் இது போன்ற நிகழ்வு ஏற்படும்.

டிச.21: நேபாள நாட்டுப் பிரதமர் கே.பி. சர்மா ஒளியின் பரிந்துரையை ஏற்று அதிபர் வித்யா தேவி பண்டாரி அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார். 2021-ம் ஆண்டில் தேர்தலை நடத்தவும் ஒப்புதல் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்