சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியது முதல் மணிப்பூர் கலவரப் பகுதி ஆய்வு வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 18-24

By தொகுப்பு: மிது

மார்ச் 18: மகாராஷ்டிரம் மாநிலம் சம்பாஜி நகரில் அவுரங்கசீப் சமாதியை அகற்ற கோரி நாக்பூரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

மார்ச் 19: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மார்ச் 19: சர்வதேச விண்வெளி மையத்தில் 286 நாட்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்பட 4 பேர் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பினர். டிராகன்-9 விண்கலத்தில் 17 மணி நேரம் பயணித்த அவர்கள், அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதியில் இறங்கினர்.

மார்ச் 20: டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டு விவகாரத்தில் அமலாக்கத் துறை மார்ச் 25 வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 20: சத்தீஸ்கரில் பஸ்தர் பிராந்தியத்தில் நடைபெற்ற மோதலில் 30 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

மார்ச் 21: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் சிக்கியதையடுத்து அவர் அலகாபாத் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

மார்ச் 21: தமிழக சட்டப்பேரவையில் 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

மார்ச் 22: மக்களவை தொகுதி மறுவரையறை செய்வதை 25 ஆண்டுகள் தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் முதல்வர்கள் பினராய் விஜயன் (கேரளம்), ரேவந்த் ரெட்டி (தெலங்கானா), பகவந்த்மான் (பஞ்சாப்); கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 14 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மார்ச் 22: 59ஆவது ஞானபீட விருதுக்கு சத்தீஸ்கர் எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு செய்யப்பட்டார். சத்தீஸ்கரிலிருந்து இந்த விருதை பெறும் முதல் எழுத்தாளர் இவர்.

மார்ச் 22: கலவரத்தால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு மணிப்பூர் சென்றது.

மார்ச் 23: டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஒளிப்படங்கள், வீடியோவை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது.

மார்ச் 23: பிரபல வயலின் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதும், நடனக் கலைஞர் ஊர்மிளா சத்ய நாராயனாவுக்கு ‘நிருத்திய கலாநிதி’ விருதும் வழங்கப்படுவதாக சென்னை மியூசிக் அகாடமி அறிவித்தது.

மார்ச் 24: கேரளத்தில் பாஜக தொண்டர் சூரஜ் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு தலச்சேரி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

மார்ச் 24: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியில் தொடர விரும்புகிறாரா, இல்லையா என்று 10 நாட்களில் பதிலளிக்கும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.

மார்ச் 24: கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்களை குறி வைத்து ‘ஹனி டிராப்’ செய்யப்படுவதாக அமைச்சர் ராஜண்ணா புகார் தெரிவித்தது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்