மார்ச் 5: மக்களவை தொகுதி மறுவரைவறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
மார்ச் 5: மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்களிலிருந்து எம்.பி.க்கள் கொண்ட கட்சிகள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையே அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மார்ச் 5: இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏப்.2 முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
மார்ச் 5: டேபிள் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சரத் கமல் (41) அறிவித்தார்.
மார்ச் 5: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (35) அறிவித்தார். 170 ஒரு நாள் போட்டிகளில் 5,800 ரன்களை இவர் எடுத்துள்ளார்.
மார்ச் 6: சட்ட விரோத பண பரிவர்த்தனை புகாரில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
மார்ச் 6: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக வழக்குகள் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மார்ச் 6: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
மார்ச் 6: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் (37) அறிவித்தார். இவர் 274 ஒரு நாள் போட்டிகளில் 7,795 ரன்கள் குவித்துள்ளார்.
மார்ச் 6: லண்டனில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் தாக்க முயற்சித்ததற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
மார்ச் 7: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மார்ச் 9: மலையாளர் எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘எண்ட ஆண்கள்’ என்கிற நூலை ‘எனது ஆண்கள்’ என்கிற தலைப்பில் மொழிபெயர்த்த பேராசிரியர் ப. விமலா சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகடாமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மார்ச் 9: துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இக்கோப்பையை 2002, 2013, 2025 என மூன்று முறை இந்தியா வென்றுள்ளது.
மார்ச் 9: இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். ஆசிய கண்டத்திலிருந்து இச்சாதனையைப் படைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா.
மார்ச் 10: தமிழகத்தில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களில் பால் வழங்குவது குறித்து பரிசோதித்து பார்க்க இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
மார்ச் 10: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த பி. தனபால், ஆர். சக்திவேல் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
மார்ச் 10: கனடாவில் லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னே அந்நாட்டின் புதிய பிரதமராகிறார். லிபரல் கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்தார்.
தொகுப்பு: மிது
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago