நவ.11: உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நவ.12: தமிழ்நாடு புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார்.
நவ.12: இரண்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். சாலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரணவ் பட்டம் வென்றார்.
நவ.13: ஜார்க்கண்டில் முதல் கட்டமாக 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 65% வாக்குகள் பதிவாயின.
» பரந்தூர் போராளியான ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை
» கூகுள் குரோமுக்கு வந்த சோதனை! - விற்றுவிட நீதித்துறை நிர்பந்தம்
நவ.13: உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
நவ.15: இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அநுர குமார திசநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது.
நவ.16: உத்தரப் பிரதேசம் ஜான்சி நகரின் மாகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.
நவ.16: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நவ.16: சென்னையில் 31 அணிகள் பங்கேற்ற ஆடவருக்கான 14-ஆவது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஹரியாணா அணியை வீழ்த்தி ஒடிஷா அணி சாம்பியன் ஆனது.
நவ.17: பிரதமர் நரேந்திர மோடிக்கு நைஜீரிய நாட்டின் ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்’ என்கிற உயரிய விருது வழங்கப்பட்டது.
நவ.17: உலக கேரம் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
நவ.17: டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நவ.18: இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இவர் ஏற்கெனவே இடைக்கால பிரதமராக இருந்தவர்.
நவ.18: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
நவ.18: இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்ற ஏடிபி பைனஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். 55 ஆண்டு வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலியர் இவர்.
தொகுப்பு: மிது
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago