‘எக்ஸ்பிளைண்டு’ முதல் ‘பீரியட் வரை: ஓடிடி தொடர்கள் - ஒரு பார்வை

By ராகா

திரையரங்கத்துக்குச் சென்று திரைப்படம் பார்த்த காலம் மாறி ஓடிடியில் எப்போது திரைப்படங்கள் வெளியாகும் எனக் காத்திருக்கிற காலம் இது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘ஓடிடி’ என்பது இணையத்தில் பரலாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளிலேயே திரைப்படங்கள், ஆவணப்படங்கள், கல்வி சார்ந்த படங்கள் ஆகியவை வெவ்வேறு ‘ஓடிடி’ தளங்களில் வெளியாகின, இனியும் வெளியாக இருக்கின்றன. இப்படி மாணவர்களுக்குப் பயன் தரக்கூடிய, கல்வி சார்ந்த சுவாரசியமான ‘ஓடிடி’இல் வெளியான தொடர்கள் சில…

l ‘அவர் பிளானட்’ (Our Planet): உலகளாவிய இயற்கை நிதியம் (Worldwide fund for nature), பிரபல ஓடிடி தளமான ‘நெட்பிளிக்ஸுடன்’ இணைந்து ‘அவர் பிளானட்’ எனும் ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் காட்டுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், புவி அடையும் மாற்றங்கள் குறித்தும் இந்த ஆவணப்படத்தில் பேசப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்படத்துக்கான காட்சிகளைப் படம்பிடித்துள்ளார் இயக்குநர் டேவிட் அட்டன்பரோ.

2019ஆம் ஆண்டு வெளியான முதல் சீசனில் 8 படங்களும், 2023இல் வெளியான இரண்டாவது சீசனில் 4 படங்களும் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு படமும் குறைந்தது 45 நிமிடங்களுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. காடுகளுக்கே கூட்டிச்சென்றது போன்ற தத்ரூபமான காணொளிகள், தெளிவான விளக்கங்கள் ஆவணப்படத்தைச் சுவாரசியமாக வைத்திருக்கின்றன. சுற்றுச்சூழல், காட்டுயிர் சார்ந்து இயங்க விருப்பமுள்ள மாணவர்களும், இப்பிரிவுகளின்கீழ் தகவல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களும் தவறவிடக்கூடாத ஆவணப்படம் இது.

l ‘எக்ஸ்பிளைண்டு’ (Explained): பெயருக்கு ஏற்ப பாப் கலாச்சாரம் முதல் பங்குச் சந்தை வரை 44 தலைப்புகளின்கீழ் தகவல்களைச் சேகரித்துத் தொகுக்கப்பட்டுள்ள ஆவணப்படம். எந்தவொரு தலைப்பானாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் கில்லாடியான பிரபல ‘வாக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் படைப்பாக இது உருவாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் வெளியான முதல் சீசனோடு சேர்த்து மொத்தம் மூன்று சீசன்கள் வெளியாகியுள்ளன.

உதாரணத்துக்கு, ‘கோடிங்’ எனும் ஆவணப்படத்தை எடுத்துக்கொண்டால், ‘கோடிங்’ உருவான வரலாறு முதல் சம்பந்தப்பட்ட துறையின் சமீபத்திய அப்டேட் வரை குறிப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்துறை சார்ந்து நடக்கப்போவது என்ன என்கிற தகவலும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. 20-25 நிமிடங்களில் ஒரு தலைப்பைப் பற்றிய அனைத்து முக்கியத் தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும். பொது அறிவுப் பாடத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆவணப்படம். இப்படமும் ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில்தான் இடம்பெற்றுள்ளது.

l ‘அப்ஸ்டிராக்ட்’ (Abstract): கடந்த சில ஆண்டுகளில் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு துறையாக வரைகலை வடிவமைப்பு வளர்ச்சி கண்டுள்ளது. இணையப் புரட்சியால் இது தொடர்பான ‘டிசைன்’ துறை பல பரிமாணங்களை எட்டியுள்ளது எனலாம். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ‘டிசைன்’ இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு எல்லாம் ‘டிசைன்’ மயமாகிட்டது. உலகெங்கிலும் உள்ள இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஒன்றிணைந்து ‘அப்ஸ்டிராக்ட்’ எனும் இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளனர்.

கட்டிடவியல், காலணி தயாரிப்பில் ‘டிசைன்’, அரங்க அமைப்பு, ஒளிப்படக்கலை, ஆடை வடிவமைப்பு, டிஜிட்டலில் ‘டிசைன்’ என இத்துறையின் அனைத்து அம்சங்களையும் அலசியிருக்கிறார்கள். இத்துறையில் ஈடுபட இருப்போருக்கான ஒரு தகவல் களஞ்சியம் இந்த ஆவணப்படம். ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் இப்படத்தைக் காணலாம்.

l பீரியட் - எண்ட் ஆஃப் தி சென்டன்ஸ் (Period - End of the sentence): 2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற்ற ‘பீரியட் - எண்ட் ஆஃப் தி சென்டன்ஸ்’ ஆவணக் குறும்படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் பார்க்கலாம். குறைந்த விலையில் நாப்கின் தயாரித்த கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அருணாசலம் முருகானந்தத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

மாதவிடாய் குறித்து இந்தியக் கிராமங்களில் நிலவும் மூடநம்பிக்கைகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் ராய்க்கா ஸெட்டாப்ச்சி. இன்றும் இந்தியாவின் பல கிராமங்களில் பெண்கள் நாப்கின் பயன்படுத்துவதற்கான சூழல் அமையாமல் உள்ளது. மாதவிடாய் நாள்களில் தனிமைப்படுத்தப்படும் பழக்கமும் ஒழியவில்லை. இது போன்று பெண்கள் சந்திக்கும் மாதவிடாய்ப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கிறது இந்த ஆவணப்படம்.

l ‘சேஸிங் கோரல்’ (Chasing Coral): உலகெங்கிலும் இருந்து தேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள், அறிவியலாளர்கள், ஒளிப்படக் கலைஞர்கள் சேர்ந்து கடலுக்கு அடியில் சென்று ஆவணப்படம் ஒன்றைக் காட்சிப்படுத்தியுள்ளனர். கடலுக்கு அடியில் உள்ள பவளத்திட்டுகள் ஏன் மறைகின்றன என்கிற கேள்விக்கு விடை தேடிச் செல்லும் பயணமாக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 75% பவளத்திட்டுகள் மறைந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் பாதிப்பால் ஏற்படக்கூடிய இந்த விளைவு, 2050ஆம் ஆண்டில் இன்னும் மோசமடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைக் குறித்துத் துறைசார் நிபுணர்களின் கருத்துகளும், ஆவணப்படத்தின் காணொளியும் கடலுக்கு அடியில் இருக்கும் உலகைக் கண் முன் கொண்டுவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்