செப்.13: அந்தமான் நிக்கோபார் தலைநகரான போர்ட் பிளேர், ஸ்ரீவிஜயபுரம் என்று மாற்றப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
செப்.13: மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.
செப்.14: அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
செப்.15: ஆன்மிகச் சுற்றுலா சென்று உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
» சென்னை - ஆதம்பாக்கத்தில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை!
» 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல். முருகன் நம்பிக்கை
செப்.15: பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.86 மீ. வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
செப்.16: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது ஜூலையில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் இரண்டாவது முறையாக புளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பினார்.
செப்.16: நாட்டில் முதல் முறையாக குஜராத்தில் அகமதாபாத் - புஜ் இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
செப்.17: டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவால் பதவி விலகினார். டெல்லி சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவராக ஆதிஷி மர்லேனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செப்.17: சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்ற ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் சீனாவை 1 – 0 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி வென்றது.
செப்.18: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
செப்.18: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 61% வாக்குகள் பதிவாயின.
செப்.19: தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago